Oct 05/2013: யோகா குரு என்று சொல்லிக் கொள்கிற பாபா ராம்தேவின் நிறுவனங்களில் 20 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் உள்ள ராம்தேவின் நிறுவனங்களில் வியாழக்கிழமை ரெய்டு நடந்தது. ஏராளமான அழகு சாதனப் பொருட்களுக்கு சுங்க வரி கட்டவில்லை என்பதை மத்திய சுங்கத்துறை துணை கமிஷனர் ஆர்.பி. சிங் கூறினார்.
வரி ஏய்ப்பு கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரலாம் என்று அவர் கூறினார். சோப்புகள், கை கழுவும் பொருட்கள், முகம் கழுவும் பொருட்கள் ஆகியவற்றுக்கு ராம்தேவின் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வரி கட்டுவதில்லை என்பது சோதனையில் நிரூபணமானது.
1 comment:
athu sari...
Post a Comment