Oct 11, 2013

மோடி பிரதமராகி விட்டால் இந்தியா வல்லரசாகி விடும்!

Oct 13/2013: நரேந்திர மோடி 18.10.2013 அன்று சென்னை வருகிறார்.  அருண் ஷோரி எழுதிய ஒரு நூலை வெளியிடவிருக்கிறார். நிகழ்ச்சியில் சோ, அருண் ஷோரி ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி யிருக்கின்றன

ராமனுக்கு கோயில் கட்டுவதுதான் தேசத்தின் தலையாய பிரச்சினை என்று கூறி பாபர் மசூதியை இடித்து, நாடு முழுவதும் இந்து மத வெறியைத் தூண்டி,   1998-இல் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி. இன்றோ, அயோத்தி தொகுதியில் கூட பாஜக வால் வெற்றி பெற முடியவில்லை.

வரவிருக்கும் தேர்தலில் இராமனைக் காட்டி ஓட்டு வாங்க முடியாது என்பதால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சிங்காரித்து தேசிய நாயகனாக சித்தரிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. 2009-ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவைப் போல, 2002-ல் குஜராத் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிதான் மோடி.  இந்த உண்மையை மறைத்து,  குஜராத்தில் பாலும் தேனும்  ஆறாக ஓடுவது போலவும், மோடியைப் பிரதமராகி விட்டால், மறுநாள் இந்தியா வல்லரசாகி விடும் என்றும் ஒரு மாயை திட்டமிட்டே  உருவாக்கப்படுகிறது.

  • தமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் காட்டிலும் குஜராத் முன்னேறிய மாநிலம் என்பது உண்மையா?
  • திறமையான நிர்வாகம், ஊழலில்லாத ஆட்சி, தடையற்ற மின்சாரம் – என்று குஜராத்தைப் பற்றிக் கூறப்படுபவையெல்லாம் உண்மையா?
  • அங்கே முஸ்லிம்களே மோடியை ஆதரிக்கிறார்கள் என்று கூறப்படுவது உண்மையா? குஜராத்தில் தலித் மக்களின் நிலை என்ன?
  • 2002 முஸ்லிம் மக்கள் படுகொலையும் அடுக்கடுக்கான போலி மோதல் கொலைகளும் மோடிக்குத் தெரியாமல் நடந்தவையா? மோடியால் திரை மறைவிலிருந்து இயக்கப்பட்டவையா?
  • பாரதிய ஜனதா தனி ஈழத்துக்கு ஆதரவானதா? ராஜபக்சேவைத் தண்டிக்க குரல் கொடுக்குமா? கச்சத்தீவை மீட்டுத்தருமா? தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிவிடுமா?
  • மோடியின் பொருளாதாரக் கொள்கை, மன்மோகனின் கொள்கையிலிருந்து வேறுபட்டதா?
  • மோடி என்ற பலூனை ஊதிப் பெரிதாக்குபவர்கள் யார்? டாடா, அம்பானி, மித்தல், அதானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது ஏன்?
விடை காண 18.10.2013, வெள்ளி மாலை 6 மணி சென்னை கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில் தோழர் முகுந்தன் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப் படுகிறது. தில் ம.க.இ.க பொதுச்செயலர் தோழர் மருதையன், சிறப்புரை ஆற்றுகிறார்.

No comments: