Apr 4, 2013

தொட்டால் ஷாக்கடிக்கும் நவீன பிரா!

ஏப்ரல் 06/2013: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கற்பழிப்புகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே பேகிறது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை உறுதியாகி விட்டது.  

பேருந்து நிலையங்கள் தொடங்கி பொது இடங்கள் வரை உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, அவர்களின் மார்பகங்களை தொட்டு நசுக்கிவிட்டு கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினம் தினம் இந்திய பெண்களுக்கு நடந்தேறுகின்றன. இதை அவமானமாக கருதி பெரும்பான்மையான பெண்கள் வெளியே சொல்வதில்லை.

அப்படியே வெளியே சொன்னாலும் இவர்களை பிடித்து தண்டிப்பது யார்? இந்திய காவல்துறையோ கடைந்தெடுத்த அயோக்கியர்கள். இதுபோன்ற காம கொடூரர்களின் தாக்குதல்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய கட்டாயம் இந்திய பெண்களுக்கு இருந்தது. இந்த சூழலில்தான் ஒரு  அறிய பெண்கள் உள்ளாடையை (பிரா) சென்னை SRM கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கண்டு பிடித்துள்ளனர்.

சென்னை SRM கல்லூரியில் ஆட்டோ மொபைல் படிக்கும் மாணவிகளான மோனிஷா மோகன் மற்றும் ரிம்பி திரிபாதி ஆகியோர் இந்த அதிசய பெண்கள் உள்ளாடையை கண்டு பிடித்துள்ளனர். இந்த பிராவை பெண்கள் அணிந்து செல்லும் பொழுது இந்திய காமகொடூரர்கள் பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு ( கற்பழிக்க) பிடித்தால் போதும் உடனே அந்த பெண் அணிந்திருக்கும் பிரா கடுமையான மின்சாரத்தை வெளிப்படுத்தும்.

அதாவது அந்த நவீன பிரா 3800 கிலோ வால்ட் சக்தி கொண்ட பெரும் மின்சார அதிர்ச்சி (ஷாக்) ஒன்றை கொடுக்கும். அது தொடும் நபரை உடனே மயக்க நிலைக்கு தள்ளும் சக்தி கொண்டது. அது மட்டுமல்ல இந்த சம்பவம் நடந்த  நேரம், இடம் குறித்த தகவல்கள் பெண்ணின் தாய், தந்தையர் மற்றும் உறவினர்களுக்கும் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கும் GPS வழியாக SMS கொடுத்துவிடும் இந்த பிரா. மேலும் இது போன்று 82 முறை அதிர்ச்சி (ஷாக்) கொடுக்க கூடிய அளவுக்கு திறன் வாய்ந்ததாக இந்த பிரா  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படி அதி சக்திவாய்ந்த மின்சார தாக்குதல் கொடுக்கப்படும் பொழுது, அதை அணித்து இருக்கும் பெண்களுக்கு அது எந்த கெடும் விளைவிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்திய களவாணி அரசியல்வாதிகளுக்கும், அரசு இயந்திரங்களுக்கும் பெண்களை பாதுகாக்க எங்கே நேரம் இருக்க போகிறது. அதனால், இந்த அறிய கண்டுபிடிப்புகளை தந்த மாணவிகளை பெண்களின் நலன்காக்க சேவை புரிந்த வீர மங்கைகள் என்று பிற்காலத்தில் வரலாறு போற்றும்.

1 comment:

Unknown said...

உறவுகளே..நலமா? வணக்கம் !

நல்லதும், அவசியமும் ஆன கண்டுபிடிப்பு தான்..அந்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் !