Mar 3, 2013

திட்டமிட்டு பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்படுவது ஏன்?

மார்ச் 04/2013: தீவிரவாத வழக்குகளில் சிக்கவைத்து முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைக்கும் விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ஹைதராபாத் குண்டு வெடிப்பு அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதின் எதிர்வினை என்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சொன்ன கருத்தின் மூலம், இந்திய அரசு பயங்கரவாதம் முஸ்லிம்களை குறிவைக்க தொடங்கியது. 


ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் நடத்திய மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முஸ்லிம்கள் நடத்தியதாக சொல்லி அப்பாவி முஸ்லிம் இலஞசர்களை வேட்டையாடிய, அதே ஹைதராபாத் உளவுத்துறைதான் இப்பொழுது இந்த குண்டு வெடிப்பையும் விசாரிக்கிறது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்? மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட முகமது ரயீசுதீன், முகமது அஸ்மத், அப்துல் ரஹீம், அப்துல் கரீம் என்ற அதே இளைஞர்களைதான் இப்பொழு நடந்த குண்டு வெடிப்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இளஞசர்கள் குற்றமற்றவர்கள் என்று கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள். இவர்களுக்கு போதிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோர்ட் தீர்ப்பளித்து இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

போலீஸ் துறைகளிலும் புலனாய்வு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதம் எந்த ஒரு வன்முறை சம்பவத்துக்கும் முஸ்லீம் இளைஞர்களை குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்து துன்புறுத்துவதையும், சித்திரவதை செய்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத  தாக்குதல்களுக்கு, ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள்தான் காரணம் என்று கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டனர். பின்னர்தான் காவி பயங்கரவாதத்தின் முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சரியான கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. அதை விட்டு முன்பு ஒரு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு நஷ்ட ஈடுவழங்க பரிந்துரைக்கப்பட்ட அதே நபர்களை மீண்டும் கைது செய்வது இந்திய அரசு பயங்கரவாதத்தின் அடாவடி, அராஜக, ஒரு சார்பு நடவடிக்கையாகும். இதை சம்மந்தப்பட்டவர்கள் மாற்றி கொள்ள வில்லை என்றால் இது பிற்காலத்தில் இந்தியா உடைந்து போக காரணிகளாக மாறிப்போகும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 
*மலர் விழி*

5 comments:

Anonymous said...

ONE SECTION IS TELLING GOVT IS AGAINST HINDUS BY FRAMING FALSE CHARGES. ONE SECTION IS TELLING OPPOSITE. EVERYBODY CLAIM THEY ARE NEUTRAL !! WHENEVER ACTION IS TAKEN EITHER OF ONE SECTION IS BLAMING OUR GOVT AGENCIES.
FOR A COMMON MAN LIKE ME, IT APPEARS NEUTRALITY AND TRUTH MAY BE TWO DIFFERENT THINGS.

Anonymous said...

Fantastic splendid design credit-thank you to sharing

Anonymous said...

http://www.dï.com/ - http://www.Dï.com/ - Directory Directory
Directory- Best Directory-Dï.com-http://dï.com

Anonymous said...

Wonderful web site. A lot of useful information here.
I am sending it to some friends ans additionally sharing in delicious.
And obviously, thanks for your effort!

My blog post กระเป๋าแฟชั่น

afzal rahman said...

unmaiyai sonnatharku nanri....