Feb 8, 2013

ஸ்டாலினுக்கு போட்டியா குஷ்பு? அமர்களப்படும் திமுக!

பிப் 08/2013: வார இதழ் ஒன்றுக்கு நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டியில் திமுகவின் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சென்னையில் உள்ள குஷ்பு வீட்டை திமுகாவை சேர்ந்த ஒரு கும்பல், அவருக்கு எதிராக கோஷமிட்டபடி சரமாரியாக கல் வீசி தாக்கி விட்டு சென்றனர். இதில் கார் கண்ணாடிகள் மற்றும் விளக்குகள் உடைந்தன. இந்நிலையில் திருமண நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றிருந்த குஷ்புவை தனியார் ஹோட்டலில் வைத்து  தி.மு.க.,வினரால் சரமாரியாக தாக்கப்பட்டார். 

சிந்திக்கவும்: கருணாநிதிக்கு இந்த செருப்படி போதாது. பெரியார், அறிஞசர் அண்ணா உருவாக்கி பெரும் தலைவர்கள் அங்கம் வகித்த திமுகவை கருணாநிதி கெடுத்து குட்டிச்சுவராக்கினார். தனது கடைசி காலத்தில் சரிந்து போன திமுகவின் புகழை தூக்கி நிறுத்த குஸ்பு, ராதிகா, வடிவேலு இப்படி எல்லோரையும் சேர்த்துக் கொண்டார். 

இப்பொழுது, கருணாநிதிக்கு இளம் வயதாக இருந்திருந்தால்  குஷ்புவை திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக ஆக்கி இருப்பார், எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை ஆக்கியது போல. கருணாநிதிக்கு பின்னால் திமுகவின் தலைவர் பதவிக்கு குஷ்பு வருவார். பின்னர் என்ன தமிழகத்தின் அடுத்த முதல்வர் குஷ்பு வாழ்க! என்று தன்மான தமிழன் கோஷம் போடுவான். இதுதானே இன்றைய தமிழக அரசியல்.

ஒருவர் படையப்பா, இவர் மதில் மீது பூனையாக, "வருவார் ஆனால் வரமாட்டார்" என்கிற பாணியில் காத்துக்கிடக்கிறார். மற்றவர் கேப்டன் என்று சொல்லி கொண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்குகிறேன் பேர்வழி என்று எதிர்கட்சி தலைவர் பதவிக்கு வந்து விட்டார். இவரை பார்த்து கட்சி ஆரம்பித்த ""ஜிம் பாடிகாரர் சித்தி மடியில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார். அடுத்து இளையதளபதி அரசியலுக்கு வர "துப்பாக்கி" தூக்குகிறார். தமிழர்களின் நிலைமை அந்தோ பரிதாபம்.

3 comments:

Anonymous said...

ithai pathi pesa parathesi payalungalukku arukathai illai..

லதாராணி(Latharani) said...

correct

Anonymous said...

Good article