Feb 7, 2013

2013 ம் ஆண்டின் பஞ்ச் டயலாக்!

பிப் 08/2013: கருணாநிதியின் அறிக்கை: ’இலங்கையின் 65-வது விடுதலை நாள் விழாவில் பேசிய அதிபர் ராஜபக்சே, தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது என தெரிவித்தார்.

மேலும், இனவேறு பாடு, மதவேறுபாடு, சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் உன்னத கலாச்சாரம், பற்றியும், இந்தப் பூனையும் பால் குடிக்குமா?' என்று கேட்கு மளவுக்குப் பேசியிருக்கிறார்!

ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, அவர்களை அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி விட்டு, தமிழர்களின் நிலங்களை பிடுங்கி சிங்களர்களை குடியேற்றி வரும் சர்வாதிகாரி இப்படி பேசி இருப்பதை இந்த பூனையும் பால் குடிக்குமா? என்று கருணாநிதி கேலி செய்திருக்கிறார். 

சிங்களப் பேரினவாதத்தின் சின்னமான ராஜபக்சே, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் நீண்ட காலமாக அளித்து வந்த உறுதிமொழியை  மீறி இருக்கிறார். சிங்களர்கள் சார்பில் ஈழத் தமிழினத்திற்கு கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை.

இப்பொழுதாவது நமது இந்தியப் பேரரசு விழித்துக் கொண்டு, ராஜபக்சேவின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்து கொண்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் உலக அமைப்புகளின் உதவியோடு காப்பாற்றிட முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கவும்: ஐயா கருணாநிதி,பேச்சில், நடிப்பில் உங்களை மிஞ்ச யாருக்கும் முடியாது. இந்த விசயத்தில் ராஜபக்சேவுக்கு நீங்கள்தான் குரு. இந்தியா தூங்கிக்கொண்டு இருந்தால்தானே விழிக்க! இந்தியாதானே இந்த போரையே நடத்தியது. உங்களுக்கு நேரம் போகவில்லை என்றால் அறிக்கை யுத்தத்தை ஆரம்பித்து விடுவீர்கள். 

கருணாநிதியை பற்றி ரொம்ப அழகா, சுருக்கமா கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் தலைவர் உதயகுமார் சொல்லி இருப்பதை கேட்டால் தெளிவா, புரியாதவர்களுக்கு கூட புரிந்து விடும். மக்கள் நன்றாக விழித்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

உதயகுமார் சொன்ன பஞ்ச் டயலாக்! "இடிந்தகரை கடலில் எத்தனை மணி நேரம் மிதந்தாலும் எனக்கு வாந்தி வருவதில்லை", ஆனால் திமுக தலைவர் கருணாநிதி ஈழத் தமிழர்கள் பற்றி பேசினால் எனக்கு குமட்டி கொண்டு வருகிறது. 

இடிந்தகரை : ''கடலில் எத்தனை மணி நேரம் மிதந்தாலும் எனக்கு வாந்தி வருவதில்லை.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதி ஈழத் தமிழர் பற்றி பேசினால் குமட்டிக் கொண்டு வருகிறது

4 comments:

Seeni said...

punch !

arumai...!

Easy (EZ) Editorial Calendar said...

நம்ம ஆளுங்கள போல வேற யாராலையும் இப்படி எல்லாம் பஞ்ச் டயலாக் பேச முடியாது.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

uthayakumar rungura pera kettale engalukkum kumatti kittu thaan varuthu... mutta koothingale neenga mulusa alinjaathaan engalukku nimmathi... parathesi naayingale...

Anonymous said...

udayakumar is antinational...yar kita evvalavu panam vanginano theriyala