Feb 15, 2013

தலைவரின் சிலைகள்! காக்கைக்கு கழிப்பறைகள்

பிப் 16/2013: உலகிலேயே மிக உயரமான மகாத்மா காந்தி சிலை பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நிறுவப்பட்டு உள்ளது. 70 அடி.உயரம் கொண்ட வெண்கலத்திலான இந்த சிலையை அமைக்க 10 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது.

சிந்திக்கவும்: பீகார் மாநில அரசு மக்கள் வரிப்பணத்தி கொண்டு  ஊதாரித்தனமான செயலில் ஈடுபட்டிருகிறதுஇதே வேலையைத்தான் கருணாநிதி தமிழகத்திலும் செய்தார்.

திருவள்ளுவருக்கு சிலை என்று 100 கோடி ரூபாயை தூக்கி கடலில் போட்டார். ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வதில் கருணாநிதிக்கு நிகர் அவரே. அவரது இறப்புக்குப்பின் அவர் பெயரை சொல்லவே இந்த நினைவு சின்னங்கள்.

அதுபோல் மும்பையில் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலைக்கு இணையாக மராட்டிய மன்னர் சிவாஜிக்கு சிலை வைத்தார்கள். மும்பை மக்கள் சரியான கழிப்பறை வசதி இல்லாமல் ரயில்வே தண்டவாளங்களை கழிப்பறைகளாக பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் சிவாஜிக்கு பல நூறு கோடி செலவில் சிலை தேவையா? 

கொஞ்சமாவது அறிவிருக்கிறதா இவர்களுக்கு? பீகாரிலும், தமிழகத்திலும் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். மக்கள் வரிபணத்தை கொண்டு மக்கள் நல திட்டங்களை வகுப்பதை விட்டு இந்த மாதிரி சிலைகள் வைப்பது போன்ற ஊதாரித்தனமான செயல்களில் ஈடுபடும் அரசுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
 
தலைவர்களின் பெருமைகளை சொல்ல அவர்களைப்பற்றி பாடப்புத்தகத்தில் பாடங்கள் இருக்கிறது. அரசு அலுவலகங்களில் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அரசு விழாக்களில் தலைவர்களை பற்றி சிறப்புரைகள் வழங்கப்படுகின்றன பின் ஏன் இந்த ஊதாரி செலவு. இந்த சிலைகள் காக்கைகள்  "கக்கா" போகத்தான் உதவுகிறது

1 comment:

Anonymous said...

nalla pathivu