பிப் 15/2013: காரைக்காலைச் சார்ந்த பெண் பொறியாளர் வினோதினி மீது தனது ஒருதலை காதலை ஏற்று கொள்ளாததால் ஆசிட்டை வீசினான் கொடியவன் ஒருவன். இதனால், படுகாயம் அடைந்த அவர், 3 மாத கால சிகிட்ச்சை பயனின்றி உயிரிழந்தார்.
காரைக்கால் தனியார் கல்லூரியில் பி.டேக். படித்து வந்தார் வினோதினி. அதே கல்லூரியில் சீனியர் மாணவராக சுரேஷ் படித்து வந்தார். இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டதே இல்லை. ஆனால் வினோதினியின் தந்தை ஜெயபாலனுக்கு சுரேஷ் அறிமுகமானவர்.
இந்நிலையில், ஒருநாள் தன்னை பார்க்க வந்த சுரேஷ்க்கு, வினோதினியை இதுதான் என் மகள், இவளும் நீ படிக்கும் அதே கல்லோரியில்தான் படிக்கிறாள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார் ஜெயபாலன். வினோதினியை பார்த்த சுரேஷ் கண்டதும் காதால் என்று அவள் மேல் ஒருதலை காதல் (இது காதல் இல்லை பைத்தியம்) கொண்டார்.
ஜெயபாலன் தேவையில்லாமல் தனது பெண்ணை சுரேஷுக்கு அறிமுகப்படுத்தி வைத்து தனது பெண்ணின் சாவுக்கு அவரும் ஒரு காரணமாகி விட்டார். ஆண்களுக்கு ஆயிரம் பழக்க வழக்கங்கள் இருக்கும் அதை வீடு வரைக்கும் கொண்டு வருவது முறையில்லை. அப்படியே தவிர்க்க முடியாமல் வீட்டிற்கு ஒருவரை அழைக்க நேர்ந்தால் அவரை வரவேற்ப்பு அறையோடு அனுப்பி விட வேண்டும்.
சிலர் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதும் வீட்டில் உள்ள மனைவி, பெண் பிள்ளைகளிடம் அறிமுகபடுத்தி வைப்பதும், அவர்களிடம் காபி கொண்டுவர சொல்வதும், அவர்களை வைத்து உணவு பரிமாற செய்வதும் என்று நடந்து கொள்வார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே போயி வீட்டில் வைத்து சூதாட்டம், பார்டி என்று நடத்துவார்கள். இதுவே பல சந்தர்பங்களில் பலவிதமான ஆபத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது.
முன்காலங்களில் சமூகத்தில் இந்த அளவு காலாச்சார சீரழிவுகள் இருக்க வில்லை. அப்பொழுது பேருந்து நிலைய கடைகளில் செக்ஸ் புத்தகம் விற்கப்பட வில்லை. பாலான படங்களின் சிடிக்கள் பரவலாக உலாவர வில்லை. கம்ப்யூட்டர், இன்டெர்நெட், எம்.எம. எஸ்., ஈமெயில், சாட்டிங், டேட்டிங் என்று இருக்க வில்லை. மக்களின் மனங்கள் தெளிந்த நீரோடையா இருந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக இருக்கிறது.
படிக்காத கிராமபுற மக்களை விட, படித்த கம்யூட்டர், இன்டெர் நெட் என்று ஹைடெக் மனித கூட்டம்தான் ஆபாச வலைபின்னலிலே அதிகம் விழுந்து கிடக்கிறது. உடல் உழைப்பில்லாத பணம் (ஈசி மணி), அதிகம் பிரச்சனைகள் இல்லாத ஹைடெக் வாழ்க்கை, எந்த லட்சியமோ, கொள்கையோ இல்லாத வெற்று மனம், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்கிற நிலை, இதுவே இவர்களை இதுபோன்ற பாலியல் வக்கிர சிந்தனைகளுக்குள் தள்ளுகிறது.
நம்மை சுற்றி தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள், நம்மக்கு கீழே உள்ளவர்கள் கோடி என்று ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரனும் நினைக்க ஆரம்பித்தால் ஏழை, எளிய மக்களின் பிரச்சனைகளில் தங்களால் இயன்றதை செய்யவேண்டும் என்று எண்ணினால், அவர்களது பிரச்சனைகளுக்கு தோள்கொடுக்க நினைத்தால் இதுபோன்ற சிந்தனைகள் ஏற்ப்பட எந்த முகாந்திரமும் இல்லை. நமது மனதில் உள்ள சுயநலத்தை தூக்கி எரிந்து பொதுநலத்தோடு சிந்திப்போம்.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
(சட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும் இதுபோன்ற விசயத்தில் மனமாற்றம் மிக முக்கியமானது.)
*ஊரான் வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்*
(வினோதினி தனது மாமன் மகளாக இருந்திருந்தால் ஆசிட் வீசி இருப்பானா)
இந்த பழமொழி இந்த இடத்திற்கு சரியா பொருந்தும் என்று நினைக்கிறேன்.
*மலர்விழி*
6 comments:
ஒருவர் கட்டடத் தொழிலாளி என்கின்றனர். ஒருவர் கூட படித்தவர் என்கின்றனர் எதுங்க உண்மை. யாராவது சொல்லுங்க.
அவர்கள் இருவரும் விரும்பினர் என்றும் கூறுகின்றனர்.
உண்மை கடவுளுக்குதான் வெளிச்சமா?
முன்காலங்களில் சமூகத்தில் இந்த அளவு காலாச்சார சீரழிவுகள் இருக்க வில்லை. அப்பொழுது பேருந்து நிலைய கடைகளில் செக்ஸ் புத்தகம் விற்கப்பட வில்லை. பாலான படங்களின் சிடிக்கள் பரவலாக உலாவர வில்லை. கம்ப்யூட்டர், இன்டெர்நெட், எம்.எம. எஸ்., ஈமெயில், சாட்டிங், டேட்டிங் என்று இருக்க வில்லை. மக்களின் மனங்கள் தெளிந்த நீரோடையா இருந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. //
பகுத்தறிவால் உயர்திணையான மனிதன் இத்தகைய செயல்களால் விலங்கினும் கீழாகிறான்.
மேரி ஜோஸ்....நீங்கள் நினைப்பது சரிதான்..... உண்மையில் அவன் நல்ல பையன்தான் எப்படியும் முன்னேறவேண்டும் என்ற வெறியோடு உழைப்பவன்.....வினோதினியோடும், அவர்கள் அம்மா,அப்பா அனைவருடனும் பலவருடங்களாக தொடர்புகொண்டிருப்பவன்தான்...
அவர்கள் இருவரும் விரும்பினர் என்றும் கூறுகின்றனர். இதுவும் உண்மைதான் புதிய இடம் புதிய தொடர்பு ...பழையதை மறக்க வைத்துவிட்டது.....பழையவனனறிவை இழந்து முட்டாள்தனமாக நடந்துகொண்டுவிட்டான்
முதலில் உண்மை சொல்லுங்க.. வர வர இந்த ஊடகங்களை நம்ப முடிய வில்லை. எது உண்மை எது தபு என்று தெரிய வில்லை... நீங்களே இப்படி குழப்பின, அப்புறம் எங்களுக்கு எப்படி உண்மை வந்து சேரும்...
h
காதலித்தது உண்மையோ பொய்யோ,
கொலை செய்தது தவறு.
Post a Comment