Jan 26: இஸ்லாமிய தீவிரவாதம்! இந்து தீவிரவாதம்! என்கிற வார்த்தை பிரயோகம் சரியா? எந்த ஒரு மதத்தின் பெயரோடும் தீவிரவாதம் என்கிற வார்த்தையை சேர்ப்பது சரிதானா?.
எந்த மதமும் தீவிரவாதத்தை போதிக்க வில்லை. அப்படி இருக்கையில் அந்த மதங்களின் பெயரோடு தீவிரவாதத்தை சேர்ப்பது முறையா? இஸ்லாமிய தீவிரவாதம், இந்து தீவிரவாதம், பவுத்த தீவிரவாதம், கிறிஸ்தவ தீவிரவாதம் என்று சொல்லை பயன்படுத்துவதை யார் செய்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வகை செய்யும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு, இந்து மதமோ, இந்துக்களோ எப்படி பொறுப்பாக முடியும்? அதுபோல் அல்கொய்தா போன்ற இயக்கங்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாமோ, முஸ்லிம்களோ எப்படி பொறுப்பாக முடியும்? ராஜபக்சே மற்றும் சிங்கள இனவாத இயக்கங்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு பவுத்த மதம் எப்படி பொறுப்பாக முடியும்? அதுபோல் கிறிஸ்தவ மதவெறி அமைப்புகள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு கிறிஸ்தவ மதம் எப்படி பொறுப்பாக முடியும்? இதை முதலில் நாம் நடுநிலையோடு புரிந்து கொள்ள வேண்டும்.
தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட நபர் யாரோ! அவருக்கு என்று ஒரு பெயர் அல்லது அவர் சார்ந்து இருக்கும் இயக்கத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கிறதல்லவா? அந்த இயக்கத்தின் பெயரையோ அல்லது அந்த நபரின் பெயரையோ குறிப்பிடுவதுதானே முறை. அதை விட்டு அவர் சார்ந்திருக்கும் மதத்தின் பெயரை குறிப்படுவது நியாயமா? ஒவ்வொரு மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு இனத்திலோ அல்லது மதத்திலோ சிலர் செய்யும் குற்ற காரியங்களை, தீவிரவாதங்களை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்புபடுத்தி செய்யப்படும் பிரச்சாரங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.
மேலும்,முஸ்லிம் அல்லாத மற்ற மதங்களில் உள்ளவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் அதை அந்த மதத்தோடு குறிப்பிடுவதில்லை. இன்று கூட தமிழன் டிவியில் ஒளிபரப்பான ஒரு பேட்டியில், அதன் தொகுப்பாளர், விஸ்வரூபம் திரைப்படம் தடை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளரிடம் கேட்கும்பொழுது, இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து திரை துறையினர் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வருகிறது, அதே நேரம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம் குறித்து உள்துறை சொல்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் சொல்லப்படுகிறதே என்று கேட்பார்.
நல்ல படித்த ஒரு டிவியின் தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் கூட முஸ்லிம்கள் குறித்து கேட்க்கும் பொழுது மதத்தின் பெயரால் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் இந்துக்களை பற்றி சொல்லும் பொழுது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம் என்றும் பகுத்து பார்க்க முடிகிறது. இந்து மதத்தில் ஒரு கூட்டம் செய்வதற்கு இந்துக்கள் பொறுப்பு இல்லை என்பதை அவரால் விளங்கி கொண்டது போல் முஸ்லிம்கள் விசயத்தில் அதே அணுகு முறையை பயன்படுத்த வேண்டும் என்பதை விளங்கி கொள்ள முடியவில்லையே. இந்திய வரலாறு கூட அப்படித்தான் பேசுகிறது இந்தியாவை கொள்ளையடித்த ஆங்கிலேயரை பார்த்து "ஆங்கிலயர்கள் வருகை" என்கிறது, அதேசமயம், இந்தியாவை பல்வேறு வகையில் வளப்படுத்திய மொகலாயர்களை பார்த்து "மொகலாயர் படையெடுப்பு" என்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை அதுதான் தமிழர் கலாச்சாரம்! பண்பாடு! தமிழர்களுக்கு என்று நீண்ட பண்பாடுகளும் வரலாறும் இருக்கிறது! அதை பேணி பாதுகாத்து ஒற்றுமையை, சகோதரத்துவத்தை ஏற்ப்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.
நாம் தமிழர்கள்! வெவ்வேறு மதங்களை சேர்ந்தாலும் நாம் தமிழர் என்று ஒன்றுபடுவோம்! வேற்றுமையில் ஒற்றுமை அதுதான் நிரந்தரம்!
நட்புடன் ஆசிரயர்: புதியதென்றல்.
5 comments:
விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் எடுத்தது" அந்த படத்தை DTH யில் வெளியிடுவேன் என்று சொன்னது" அனைத்துமே உள்ள்நோக்கதுடன் செய்ய பட்டது என்று தற்பொழுது அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.இந்த படத்தை நாம் திரையில் வெளியிட்டால் கண்டிப்பாக இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதனால் கண்டிப்பாக படம் தடைப்படும். என்று முதலிலேயே கமலகாசனுக்கு தெரிந்து உள்ளது. அதனால் தான் படத்தை ஒரு நாள் முன்பாகவே DTH யில் வெளியிட முயற்சி செய்தார். அவருக்கு தேவை இந்த படத்தினுடைய நச்சிதன்மை வாய்ந்த கருத்தை மக்கள் பார்த்து விடவேண்டும். என்ற உள்நோக்கத்துடன் தான் அணைத்து காயையும் கமல்ஹாசன் நகர்த்தினார் அதில் தோல்வியும் பெற்றார்.
ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.
ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.
'இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை. குர்-ஆன், தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் தொழுகை வழிபாடுகள் தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை போன்ற நகரங்கள் எல்லாம் சர்வதேசத் தீவிரவாதிகளின் புகலிடங்கள்போல் காட்டப்பட்டுள்ளன. தமி ழகத்தில் மாமா, மச்சான் உறவுமுறை பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்க வல்லது 'விஸ்வரூபம்’ திரைப்படம். 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்’ என்று சொன்ன பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது'' என்கின்றனர் முஸ்லிம் கூட்ட மைப்பினர்.
வெந்த புண்ணில் மருந்தா என்று வந்தேன்...
மருந்தேதான்...!
புண் பாவாமல் தடுக்கும் மருந்து..
நன்றி;-
அருமையான சிந்தனைதுளிகள் .......
Post a Comment