Dec 11, 2012

125 கோடி லஞ்சத்தில் பிறந்த கள்ள குழந்தை!


Dec 12: தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது கடைகளைத் திறப்பதற்கு முயற்சிகள் செய்து வருகிறது.
 
சென்னை புறநகர் பகுதியில் திருவேற்காடு நகராட்சி பள்ளிக்குப்பத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடி அளவில் வால்மார்ட் நிறுவனத்திற்காக சேமிப்புக்கிடங்கு கட்டுமான பணிகளும், அண்ணா நகரில் மார்க்கெட்டிங் அலுவலகம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகின்றன.

பாரதி வால்மார்ட் நிறுவனம் பல சில்லறை வணிகர்களை அணுகி அவர்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்தவிலையில் தருவதாக கூறி அவர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து வருகிறது என்றும் இம்மாத இறுதிவரை இந்தப்பதிவு நடக்கும் என்றும் அப்படி சேருகிறவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கி வருவதாகவும் தெரிகிறது.

தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை, வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் முடிவையும் மீறி இது நடைபெறுகிறது என்பதை பார்க்கும் பொழுது, ஜெயா அம்மையார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்பது போல் போக்கு காட்டி பின்னர் அதை எதிர்த்தது போல், இப்பொழுது வால்மார்ட்டை எதிர்ப்பதாக சொல்லி கொண்டு திரை மறைவில் வால்மார்ட் வருவதற்கான நடவடிக்கைகளை செய்வதாகவே கருத முடிகிறது.
 
இந்நிலையில், இந்தியாவில் சில்லறை வர்த்தக சந்தையில் நுழைய அமெரிக்க நிறுவனமான வால்மார்ட், ரூ.125 கோடி செலவழித்ததாக வெளியான செய்தி குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்கள் அவையில் நேற்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அந்தப் பணம் யாருக்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர். நம்ம பொருளாதார புலி மண்ணு மோகனும், சிதம்பரமும் வால்மார்ட்டை கொண்டு வந்தே தீருவேன் என்று அடம் பிடித்தது இதற்குத்தானா?
 
சிந்திக்கவும்: 125 கோடி லஞ்சத்தின் மூலம் பிறந்தது பாரதி வால்மார்ட். இதன் வருகையே கேவலமான முறையில் அமைந்திருக்கிறது. இப்படித்தான் சைனாவில் (எக்ஸ்பரி) தேதி முடிந்த பொருளை தேதியை மாற்றி மீண்டும் விற்பனைக்கு வைக்கும் போது சைனா சுகாதார துறையிடம் பிடிபட்டு அந்த பொருட்களை கடலில் கொட்டி, அதற்க்கான அபராத தொகையையும் கட்டினார்கள் இந்த யோகியர்கள். இனி உலக நாடுகளில் உள்ள வால்மார்ட்டில் தேதி முடிந்த பொருட்களை கொட்டும் குப்பை கூடைதான் இந்திய வால்மார்ட்.
 
அந்நிய தயாரிப்பாக இருக்கலாம் ஆனால் உள்நாட்டு பெயரைத்தான் வைக்க வேண்டும். (பாரதி வால்மார்ட்) உங்கள் தேச பக்திக்கு அளவே இல்லையா!

*மலர் விழி*

1 comment:

Unknown said...



எங்கும் இலஞ்சம், எதிலும் இலஞ்சம் ! உருப்படுமா நாடு