Nov 01: தமிழகத்தில் நடக்கும் அராஜக அரசியலை வன்மையாக கண்டிக்க வேண்டிய தருணம் இது.
விஜயகாந்தின் தேமுதிகவின் எம்.எல்.ஏ.களை விலைக்கு வாங்குவதும் அவரது கட்சியை உடைக்க சதிகளை செய்வதையும் ஜெயா நிறுத்தவேண்டும்.
இது ஒரு இழிவான அரசியல் தந்திரம்.
பத்திரிகையாளரை தாக்கிய தேமுதிகவின் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார், இத்தோடு இந்த விஷயத்தை விடுவதே சரியானது. அதை விடுத்து கோபமாக பேசிய விஜயகாந்தை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதும், அவர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்யும் அளவுக்கு அவரை தள்ளி இருப்பதும், தேவையில்லாத பழிவாங்கும் விடயமே.
ஆத்திரத்தில் கோபமாக பேசுபவர்களை எல்லாம் கைது செய்யவேண்டும் என்றால் தமிழகத்தின் சிறைகூடங்கள் எல்லாம் நிறைந்து போகும். விஜயகாந்த் நடிகராக, அரசியல் அரிசுவடி தெரியாதவராகவும் இருக்கலாம், ஆனால், மற்றைய ஊழல் முடைநாற்றம் எடுத்த அரசியல் பெருச்சாளிகளுக்கு இவர் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஒரு மாநிலத்தின் எதிர் கட்சி தலைவரை இப்படி ஓட ஓட விரட்டுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
தமிழக மக்கள் மின்வெட்டு, கடும் மழை, புயல், டங்கு காய்ச்சல் என்று அவதிப்படும் வேளையில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க அரசியல் காழ்புணர்வு இன்றி ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணம் இது, அதை விட்டு, அரசியல் கால்புணர்வில் பழிவாங்குவதும், ஒரு கட்சியை எதிர்த்து மற்றவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு நேரங்களை வீணடிப்பதும் முறையான செயல் அல்ல. தேர்தல் வரும்போது மட்டும், உங்கள் குடுமி சண்டைகளை போடுங்கள், தேர்தல் முடிந்ததும் மக்கள் பிரச்சனைகளை பேசுங்கள்.

மொத்தத்தில் இது ஜெயாவின் ஆராஜக, ஆணவ, பழிவாங்கும் அரசியலையே வெளிப்படுத்துகிறது. இந்த இழிவான அரசியலை வன்மையாக கண்டிக்க வேண்டியது நடுநிலைமை உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஒரு மாநிலத்தின் எதிர் கட்சி தலைவரின் நிலையே இப்படியென்றால்! சாமானியர்களின் நிலை!

நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.
5 comments:
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தும் அம்மாவை பற்றி இழிவாக பேசவேண்டாவென உங்களை எச்சரிக்கிறேன்.
அன்புள்ள அனானிக்கு, அமெரிக்காவில் சூறாவளியை சமாளிக்க எல்லோரும் ஓரணியில் நிற்கிறார்கள். அதிபர் ஒபாமா முதல் எதிர்கட்சி வேட்பாளர் வரை தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு மக்கள் பிரச்சனைகளை நோக்கி ஓடிவந்திருக்கிரார்கள். இங்கே என்னவென்றால் கருணாநிதி ஜெயாவை எதிர்த்து வீடுவீடாக போராட்டம் பிரச்சாரம் என்று அலைகிறார். ஈழத்து இனப்படுகொலைக்கு, மக்கள் பிரச்சனைகளுக்காக இவர் இது போன்ற போராட்டத்தை நடத்தியதுண்டா? அதுபோல்தான் இப்போது ஜெயாவும், விஜயகாந்தின் வாலைபிடித்து கொண்டு சுத்துகிறார்.
Am manna summaa illadaa ,oh I am singing a song
Nallaa sonneenga sir...
அட என்ன நீங்க இந்த சமயத்தில் ஒரு காமெடி கதையை சொல்றிங்க....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment