Oct 31: அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்டுள்ள சாண்டி புயல், கடற்கரையோர நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளது.
13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடும் மழையால், நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால், மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்துள்ளன.
நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் மூடப்பட்டு, 13 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கனெக்டிகட், டெலாவர், மேரிலேண்ட், மாசாசூசெட்ஸ். நியூயார்க், நியூஜெர்ஸி, பென்சில்வேனியா, ரோத் தீவு பகுதிகளில் அவசரநிலைப் பிரகடனம் நீட்டிக்கப்பட்டுள்ளது
புயல் காரணமாக நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் இதுவரை 39பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மின்சாரம் இன்றி 62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் உள்பட கிழக்கு அமெரிக்கப் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
அமெரிக்கா ஏன் வல்லரசு: ஒபாமா தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார், தேர்தல் பற்றி எனக்குக் கவலையில்லை மக்களை பற்றியே கவலைப்படுகிறேன் என்று தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜானெட் நெப்போலிடனோ அவசர ஆலோசனையில் ஈடுபாட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
National Guard: மக்களை பாதுகாக்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் 61, 0000 தேசிய பாதுகாப்பு படையினர் இரவும், பகலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவசர உதவிகள்: 3.7 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். அமெரிக்கன் கோஸ்ட் கார்ட் விமானங்களும், ஹெலிகாப்டர்களும், நியூயார், நியூஜெர்சி நகர காவல்துறை ஹெலிகாப்டர்களும் மக்களை பாதுகாப்பாக இடம்பெயர உதவின. .
மீட்புப்படை: 24 மணி நேரமும் காவல்துறை, தீயணைப்பு துறை, அம்புலன்ஸ் சேவையில் இருக்கிறது. இதுதவிர முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 140 ஹெலிகாப்டர்களுடன் 6,700 மீட்புப்படையினர் ஆயத்த நிலையில் இருப்பதாக பென்டகன் ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விஞ்சானம் மற்றும் தொலை தொடர்பு: லோகல் டிவி மற்றும் செல் போன் கம்பெனிகள் தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் மக்களுக்கு எச்சரிகையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி உதவி புரிந்தன. பத்திரிக்கைகள் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை மேற்கொண்டன.
அமெரிக்காவின் நாசா: அமெரிக்காவின் நாசா விண்வெளி பாதுகாப்பு மையம் இந்த பேரிடர் வரும் முன்னரே சரியான எச்சரிக்கையை வழங்கி இருந்தது. அது மட்டுமல்லாது அமெரிக்க சட்லைட்கள் புயலின் நகர்வு பற்றியும் அது ஏற்ப்படுத்த போகும் பாதிப்புகள் குறித்தும் உடனுக்குடன் தகவல்கள் கொடுத்தபடியே இருந்தது.
துயர்துடைப்பு பணிகள்: பாதுகாப்பாக இடம்பெயர்ந்து தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு கட்டில்கள், போர்வைகள், டவல்கள், மற்றும் உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 50 லட்சம் லிட்டர் குடிநீர், 30 லட்சம் பொருள்கள், 9 லட்சம் போர்வைகள், 1 லட்சம் கட்டில்கள் தயாராக உள்ளன என்று அவசரக்கால மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிந்திக்கவும்: அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் வேறு மாதிரியாக இருந்தாலும், உள்நாட்டு மக்களின் பாதுகாப்பு, நீதி, சுதந்திரம் போன்ற விசயங்களில் உலகிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது. இந்தியாவில் சுனாமி மற்றும் பற்பல பேரிடர்கள் வந்த பொழுது மக்களை முதலில் பாதுகாத்தது சக மக்களும், தொண்டு நிறுவனங்களும்தான்.
இது மட்டுமா? இந்திய மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்கும்போது வேடிக்கை பார்ப்பது, கூடங்குளம் அணு உலை போராட்ட மக்களை ஒடுக்க கோஸ்ட் கார்ட் விமானங்களை பயன்படுத்தி மிரட்டுவது, சத்தீஸ்கர் பழங்குடி மக்களை கொன்று குவிக்க ராணுவத்தை ஏவுவது, இந்திய ராணுவத்தின் பெரும்பகுதியை காஸ்மீரில் குவித்து அந்த மக்களை கொன்று குவித்து வருவது, இப்படியாக சொந்த மக்களை பாதுகாப்பதை விட கொன்று குவிப்பதிலும், அந்நிய முதலாளிகளிடம் நாட்டை அடிமைபடுத்துவதிலுமே இந்தியா ஆர்வம் காட்டுகிறது.

இயற்கை பேரிடர்கள் வரும்போது மக்களை பாதுகாப்பதில் அமெரிக்காவின் சேவையை பார்த்து இந்தியா வெட்கப்பட வேண்டும், பாடம் படிக்க வேண்டும்.
2 comments:
இந்தியாவுடைய மக்கள் தொகைக்கு நாம் இதைதான் செய்ய முடியும்.
எவளவு பெரிய மக்கள் தொகை இருந்தாலும் ஒவ்வொருதங்களும் அவவங்க கடமையை செய்தாலே எந்த சூழ்நிலையையும் சமாளிக்கலாம்.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment