அஹ்மதாபாத். july, 26: மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த காரணத்தால் குஜராத் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீது தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை 3 வார காலத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து மோடி தனது வீட்டில் கூட்டிய அவசர கூட்டத்தில் ஹிந்துக்கள் அவர்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதி அளிக்கவேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் உத்தரவிட்டதை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கோபமடைந்த மோடி, 1990 ஆம் ஆண்டு அத்வானி ரதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட பா.ஜ.க தொண்டர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் மரணமடைந்த சம்பவத்தில் சஞ்சீவ் பட் மீது தொடரப்பட்ட வழக்கை தூசி தட்டி அவரை பழிவாங்கும் நடவடிக்கையை துவக்கியது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென குஜராத் உயர் நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் மனு தாக்கல் செய்திருந்தார். வெள்ளிக்கிழமை நடந்த இந்த மனு மீதான விசாரணையின் போது பட் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, “இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 4 வார காலத்துக்கு வழக்கு விசாரணை மீது தடை விதிக்க வேண்டும்’ என்று பட் தரப்பு வழக்குரைஞர் சையத் வாதாடினார். இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விவாதம் நடந்தது. இந்த வழக்கு தொடர்புடைய மற்றவர்களின் விவாதங்களைக் கேட்ட பிறகு வெள்ளிக்கிழமை தான் அளித்த தீர்ப்பை 3 வாரத்துக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி வரை பட் மீதான விசாரணை நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த வழக்கின் மறுவிசாரணை ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக சையத் தெரிவித்தார்.
*குறுக்கு வழியில் மக்களையும் அதிகாரிகளையும் பொய் வழக்குகளால் ஜெயிலில் அடைக்கும் ஒரு மத தீவிரவாதிக்கு பிரதமராக வேறு ஆசை. உலகமே இவனை காரி துப்புகிறது இதில் பிரிட்டனும், அமெரிக்காவும் பல முறை விசா தர மறுத்துள்ளதை அவதானித்தல் நன்கு அறியும். இதில் கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு நடந்த கலவரத்தில் மோடியின் பங்கு என்ன அனைவரும் அறிந்ததே.
ப ஜ க்குள் குடும்பி பிடி சண்டையில் அரைக்கால் டவுசர் கிழிந்து ஆளுக்கு ஒண்ணா மறைத்துள்ளனர், இதில் தீவிரவாதி மோடியை பிரதமாராக நிற்கவைத்தால் அம்மணமாக நிற்கப்போகிறது ப ஜ க?
4 comments:
இவன் தீவிரவாதி இல்லை...பயங்கரவாதி....தலைப்பை மாத்துங்க சார்..
unmai!
Best man in India
prime minister of India in 2014
Post a Comment