ஹைதராபாத்,july,24: ஆந்திர பிரதேச மாநிலத்தில் சீனியர் மாணவிகளின் ராகிங்கால் மாணவிக்கு பேசும் சக்தி இழக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் ஒன் மாணவியான ஷியாமிலுக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் காயத்ரி ஜூனியர் கல்லூரி ஹாஸ்டலில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின்சாரம் தடைப்பட்ட வேளையில் மாணவியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த சீனியர் மாணவிகள் அவரை தாக்கியுள்ளனர். நைலான் கயிற்றால் மாணவியின் கழுத்தை நெரித்து மூச்சுத்திணற வைத்துள்ளனர். இதனால் அவர் பேசும் சக்தியை இழந்துள்ளார்.
எத்தனை சட்டம் கொண்டுவந்து என்ன பயன். மாணவர்கள் நீங்கள் திருந்தாவிடில்?
No comments:
Post a Comment