Jun 30, 2012

ஊழல் அற்ற முதல் மாநில முதல்வர்! கேஜ்ரிவால்!!

அகமதாபாத், ஜூன் 30:  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் ஊழலற்றவர் என்று காட்ட விரும்பினால், முதலில் லோக் ஆயுக்தவை அமைக்க வழிசெய்ய வேண்டும் என்றார் அண்ணா ஹசாரெ குழுவின் அரவிந்த் கெஜ்ரிவால்.

மோடி ஊழல்வாதி என்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "மோடியை நான் ஊழல்வாதி என்று சொல்லவில்லை.  ஆனால், ஊழல்களில் தொடர்புடைய தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவர் பாதுகாக்கிறார். அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு ஆகாமல் பார்த்துக் கொள்கிறார். அதற்கு, லோக் ஆயுக்த அமைப்பை அமைக்காமல் இழுத்தடிக்கிறார். 


கடந்த 9 ஆண்டுகளாக இது குறித்து முறையிட்டும் லோக் ஆயுக்த அமைப்பை அவர் ஏன் அமைக்கவில்லை? ஊழல் இல்லாத மாநிலமாக குஜராத்தை மாற்ற வேண்டும் என்று மோடி விரும்பினால், முதலில் அவர் லோக் ஆயுக்தவை அமைக்க வேண்டும்” என்றார் கேஜ்ரிவால். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.



இந்த தீவிரவாதி மோ(கே)டி ஹிந்துத்துவா தீவிரவாதிகளை தூண்டிவிட்டு சிறுபான்மையினரை கூட்டம் கூட்டமாக கொன்றுவிட்டு நல்லவனாக முதல்வர் இருக்கையில் அமர்ந்து இருப்பது அந்த இருக்கைக்கே கேவலம், இதில் பிரதமாரக ஆசை வேறு. மேலும் பல முறை அமெரிக்க  விசாவுக்கு முயற்சித்து தீவிரவாதி என்று முத்திரை குத்தி அனுப்பப்பட்டவன் பின்பு பிரிட்டனும் இதையே சொல்லி விசா தர மறுத்தது இந்த கேடிக்கு சாரி மோடிக்கு.