Apr 23, 2012

மக்களின் சாவில் மகிழ்ச்சி கொள்ளும் அரசு!

April 24: மேட்டுப்பாளையத்தில் அனந்தசாகர் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தோல்வி பயம் பிளஸ் 2 மாணவி வினோதினி வயது 17 தற்கொலை செய்துகொண்டார்.

சிந்திக்கவும்: ஒருநாட்டின் வருங்கால தூண்கள் அதன் மாணவர்கள் என்று சொல்லலாம். அப்படிபட்ட மாணவர் சமுதாயத்துக்கு பாதுகாப்பற்ற ஒரு சூழலே இந்தியாவில் நிலவி வருகிறது. வீட்டில் இருந்து படிக்க வெளியே இறங்கும் பிள்ளைகள்  உயிரோடு திரும்பி வருவார்களா என்று ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு வாழவேண்டியது இருக்கிறது.

ஈவ்டீசிங், மாணவிகள் மீது பாலியல் பலாத்காரம் என்று ஒருபுறம் பிரச்சனைகள் இருக்க மறுபுறம் அவர்கள் பயணம் செய்யும் வாகனங்களுக்கு பாதுகாப்பில்லை. பள்ளிகூடங்கள் இருக்கும் சாலைகளில் மாணவர்கள் கடந்து சொல்ல சரியான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை. பள்ளிக்கூடம் விடும் நேரங்களில் அந்த பிள்ளைகள் பாதுகாப்பாக வீட்டுக்கு சொல்ல தேவையான வாகன வசதிகள் செய்து கொடுக்கப்படுவது இல்லை.

இது போல் ஏரிகள், குளங்கள் உள்ள பகுதிகளில் மக்கள் குளிக்க போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுப்பதில்லை. பாதுகாப்பற்ற வாகன சேவை, பாதுகாப்பற்ற படகு சேவை, இப்படி தினம் நடக்கும் விபத்துக்கள் மூலம் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. இதையெல்லாம் கவனிக்க முடியாத அரசுகள், அதன் பொறுப்பற்ற அதிகாரிகள் என்று ஒவ்வொருவரும் இதற்க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

மேலை நாடுகளில் ஸ்கூல் பஸ்ஸில் எமர்ஜன்சி லைட் எரிந்து குழந்தைகள் இறங்கி கொண்டிருந்தாள் பின்னால் வரும் வாகனங்கள் குறிப்பிட்ட தூரத்துக்கு முன்பே நிறுத்தி விடவேண்டும். ஸ்கூல் பஸ் புறப்பட்ட பின்னரே அவர்கள் புறப்பட முடியும். படகு பயணங்களில் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோல் நினைத்தவுடன் குளங்களில் இறங்கி குளிக்க முடியாது. குளங்களை சுற்றி பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டிருக்கும். 

அதுபோல் மாணவர்களை இத்துணை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று பெற்றோர் துன்புறுத்த முடியாது. இதுபோல் தற்கொலைகள் ஒவ்வொரு வருடமும் எத்தனயோ நடந்தும் பொறுப்பில்லாத கல்வித்துறை இதை தடுத்து நிறுத்த இதுவரை எந்த உருப்படியான முயற்ச்சியையும் செய்யவில்லை என்பதே எதார்த்தமான உண்மை.  எத்தனையோ படகு பயணங்கள் விபத்தில் முடிந்தும் இன்னும் பாதுகாப்பில்லாத படகு பயணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்திய அணு ஆராச்சி துறை 2035க்குள் இந்தியா முழுவதும் 80 அணு உலைகளை திறக்கபோகிறோம் என்று அறிவித்துள்ளது. அணுஉலைகள் திறப்பது மூலம் ஒரு நாடு முன்னேற்றம் அடைந்து விடமுடியாது. நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மருத்துவம், குடிநீர், சாலை வாசதிகள், கல்வி, மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்காமல் நூற்றுகணக்கில் அணு உலைகளை கட்டுவதன் மூலம் நாட்டை முன்னேற்ற முடியாது. உலகிலேயே கழிப்பிட வசதி இல்லாமல் திறந்த வெளியில் மலம், ஜாலம் கழிக்கும் ஒரு நாடு என்கிற நிலையை விட்டு நாட்டை மாற்றாமல் ஆயுதங்களை வாங்கி குவிப்பதின் மூலம் என்ன பிரோஜனம்.

3 comments:

Seeni said...

sariyaa keetteenga..!

Unknown said...

அணுஉலைகள் திறப்பது மூலம் ஒரு நாடு முன்னேற்றம் அடைந்து விடமுடியாது.////

உண்மை நண்பரே..இதை தெரியாதவர்கள்தான் நமது இந்திய நாட்டை அண்டுகொண்டிருக்கின்றனர்

கூடல் பாலா said...

பண முதலைகள் தங்கள் வசதியைப் பெருக்கிக்கொள்ள அணு உலை அமைத்தால் நாடு வல்லரசாகிவிடும் என்ற போலி நம்பிக்கையை மக்களிடையே விதைத்து வருகின்றனர் ...