April 21: புதுடெல்லி: சேது சமுத்திர திட்டத்தை தேசிய
சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று மத்திய
அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.
மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்பது போன்ற விவாதத்தில் மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது.
அதனால், சேது சமுத்திரம் குறித்து புதிதாக கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிந்திக்கவும்: மத்திய அரசின் முடிவு ஆபத்தானது மட்டும் அல்ல கேவலமானதும் கூட. இப்படி கேவலமான ஒரு முடிவை செய்வதற்கு ஒரு அரசு தேவையா? மத்திய அரசு இது போல் மற்ற விடயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை நீதிமன்றங்களிடம் ஒப்படைக்குமா?
இந்திய நீதிமன்றங்கள் எல்லாம் காவி மதவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கின்றன. பாபர் மசூதி விடயத்தில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லாமல் நம்பிக்கை அடிப்படையிலே தீர்ப்பை சொன்னார்கள். அதுபோல்தான் இப்போதும் சேது சமுத்திரம் திட்டத்திலும் நடக்கப்போகிறது.
இதே மத்திய அரசு ஏன் , ஈழத்திற்கு அமைதி படை அனுப்பும் போதும், சீக்கிய பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பும் போதும் நீதிமன்றங்களின் அனுமதிகளை பெறவில்லை. தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிக்கும் போதும், ஈழத்து சொந்தங்களை சிங்கள இனவெறி கயவர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் போதும் தமிழகத்தில் உள்ள தமிழர்களின் உணர்வு ஈழத்து தமிழர்கள் என்பவர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்கிற உண்மை ( வெறும் நம்பிக்கை இல்லை) அடிப்படியில் ஏன் செயல்படவில்லை.
இந்திய அரசு என்பது மதவாதத்தின் மொத்த உருவமாக, முதலாளித்துவத்தின் அடிவருடியாக செயல்படுகிறதே தவிர மனிதாபிமானத்தின், மனித நேயத்தின் அடிப்படையில் செயல்படவில்லை. சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் விடயத்தில் உள்நாட்டு மக்கள்மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு முன்னாள் ஏன்? நீதிமன்றங்களை நாட வில்லை. பல நூறு ஆண்டுகளாக காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் அந்த காட்டை தங்கள் புனித பூமியாக நம்பும் அந்த நம்பிக்கைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வில்லை. இதில் இருந்து இந்த கயவர்களின் சுயரூபம் வெளிப்படுகிறது.
5 comments:
எல்லாம் காவி மதவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கின்றன. //correct sir
த.ம 1
unmai !
சிறப்பான பதிவு.
நல்ல கேள்வி! அருமையான விளக்கம்
பில் சொல்ல முடியுமா மத்திய அரசு?
புலவர் சா இராமாநுசம்
Post a Comment