Mar 29, 2012

இந்தியாவை ஆட்சி செய்யும் ஹிந்துத்துவா!

March 30, டெல்லி:  சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பர்லிமன்ட் கூட்டத்தொடரில் திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது.

மத்தியை ஆளும் காங்கிரஸ் அரசும் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான் என்பது பல சந்தர்ப்பங்களில் நிருபிக்கப்பட்ட உண்மை. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கம் இந்திய ராணுவம், உளவுத்துறை, காவல்துறை,   நீதி துறை மற்றும் அரசியல் கட்சிகளில் ஊடுருவி விட்டது என்பதை நிருபிக்கும் பல சம்பவங்கள் இந்தியாவில்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாபர்மசூதி இடிப்புக்கு துணை போன காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் முதல் பாபர் மசூதி வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வரை நமக்கு பல ஆதாரங்கள் உள்ளன. கூடங்குளம் அணு உலையை திறக்க அரசு இயந்திரங்களை கொண்டு அடாவடி நடவடிக்கை எடுத்த மத்திய மாநில அரசுகள் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த தயக்கம் காட்டுவதேன்.

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பாபர்  மஸ்ஜித் விவகாரத்தில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பா.ஜ.கவினரையே அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் கரசேவைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று பேசினார். குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு நடந்தவுடனேயே அந்த பழியை முஸ்லிம்களின் மீது போட்டார். குஜராத் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பயங்கரவாதி மோடியுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறார்

இப்படி பல சூழ்நிலைகளில் தனது ஹிந்துத்துவா பாசிச முகத்தை பகிரங்கமாக வெளிக்காட்டினார் முதல்வர் ஜெயலலிதா. தமிழக மக்களுக் பெரும் நன்மையை பெற்றுத்தரும் சேதுக் கால்வாய் திட்டத்தை கற்பனையான ராமர் பால கதை சொல்லி முடக்கப்பார்க்கிறார். பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பதில் மத்திய அரசு எந்த தாமதமும் காட்டக் கூடாது. அதுகுறித்த தனது கருத்துகளை நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று கூறியுள்ளார்.
*மலர்விழி* 

8 comments:

கபிலன் said...

நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ராமர் பாலம் அல்லது சேது பாலம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. அது ராமாயணத்தில் கூறியுள்ள பாலம் தான் என்பது பல கோடி மக்களின் நம்பிக்கை. அதனை தேசிய சின்னமாக அறிவிக்க விடுத்த கோரிக்கை நியாயமானதே ! முதல்வருக்கு பாராட்டுக்கள் !

Seeni said...

nallaa vilakkuneenga!

Anonymous said...

அவசியம் கேட்க வேண்டியது.


இந்து கடவுள்கள், இராமர் பாலம் பற்றி சீமானின் பேச்சை //////// இங்கு//////// சொடுக்கி கேட்கவும்
.
.

.

karai said...

ராமரே இன்று இருந்தால் தமிழர்கள் படும் அவஸ்தையை கண்டிப்பாக உணர்ந்து இருப்பர் !!!
அவரே முன் வந்து பலத்தை இடித்து இருபார் !!!!

ராமர் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை ராமர் வாழந்ததக குறிபே இல்லை !!!
இல்லாத ராமருக்கு பிறப்பிடம் அயோத்தி வெறிபிடிச்ச காவிகளின் நரித்தனம் !!!

தமிழனுகாக இந்த வட நாட்டுகரன் நல்லது செய்ய மாட்டன் !!!!

karai said...

ராமரே இன்று இருந்தால் தமிழர்கள் படும் அவஸ்தையை கண்டிப்பாக உணர்ந்து இருப்பர் !!!
அவரே முன் வந்து பலத்தை இடித்து இருபார் !!!!

ராமர் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை ராமர் வாழந்ததக குறிபே இல்லை !!!
இல்லாத ராமருக்கு பிறப்பிடம் அயோத்தி வெறிபிடிச்ச காவிகளின் நரித்தனம் !!!

தமிழனுகாக இந்த வட நாட்டுகரன் நல்லது செய்ய மாட்டன் !!!!

Anonymous said...

நாட்டுக்கு தேவை சேது சமுத்திரமா? ராமர் பாலமா?
சத்யம் டி.வி.யில் INTJ & RSS விவாதம்!


சத்யம் தொலைகாட்சியில் நேற்று சேது சமுத்ரம் குறித்த விவாதத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத்தலைவர் மற்றும் RSS அமைப்பின் சடகோபன் பங்கு பெற்ற விவாதம் நடை பெற்றது. இதில் நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவை சேது சமுத்திரமே அன்றி ராமர் பாலம் அல்ல! என முஹம்மத் முனீர்
தன விவாதத்தில் பேசும் பொது குறிப்பிட்டார்.

Anonymous said...

இந்தியாவை ஆட்சி செய்யும் ஹிந்துத்துவா! So what?

சிரிப்புசிங்காரம் said...

இந்தியவை ஹிந்துக்கள் ஆளாமல்,துலுக்கனும்,கிருஸ்துவனும்,
உங்கள மாதிரி காட்டிக்கொடுக்கிற நாய் பயலுங்களுமா ஆளுவது....?????இதுமாதிரி நீ எழுதுறதுக்கு எவ்வளவு வாங்கினே....???????