Aug 9, 2011

காஸ்மீரில் தொடரும் போலி என்கவுண்டர்!

AUG 10, புதுடில்லி: காஷ்மீரில், கடந்த 7ம் தேதி பூஞ்ச் பகுதியில் நடந்த போலி என்கவுன்டர் குறித்து அறிக்கை அளிக்கும்படி ராணுவத்துக்கு, மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில், கடந்த 7ம் தேதி பாதுகாப்பு படையினருக்கும், லஷ்கர் -இ- தொய்பா இயக்க அபு உஸ்மான் என்பவருக்கும் இடையே, 12 மணி நேரம் சண்டை நடந்ததாகவும், இந்த சண்டையில் உஸ்மான் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், கொல்லப்பட்டவர் லஷ்கர் -இ- தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் அல்ல, ரஜவுரி பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி என, போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் ராணுவ வீரர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராணுவத்திடம் கேட்டுள்ளார்.

1 comment:

Anonymous said...

ஒரு கறுப்பின மனிதர் காவல்துறையால் கொல்லப்பட்டதற்காக ஒரு வாரமாக ரணகலப்படுகிறது வல்லரசான
இங்கிலாந்து அரசு.

ஆனால் இங்கே ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேலாகவே அப்பாவிகள் போலீஸ் காவலிலேயே
கொல்லப்படுகிறார்களோ என்ற அஞ்சப்பட்டும் ஒரு மாற்றமும் இல்லை.

அப்படி இறப்பவர் அனைவருமே தலித் மற்றும் சிறு பான்மை மக்கள் என்பதால் நிர்வாகத் துறையில் மிகப்பெரிய தவறான அணுகுமுறை இருக்கிறதோ என்று அய்யப்படத்தோன்றுகிறது.

- தலித் மைந்தன்