AUG 14, முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில், ‘’அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன்.
இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை. அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.
இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக் கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’என்று கூறியுள்ளார்.
சிந்திக்கவும்: அமெரிக்க அதிகாரி இனவெறியோடு சொல்லி இருப்பதாக தெரியவில்லை. அப்படி பார்த்தால் அமெரிக்காவில் இந்தியார்கள்தான் சாப்ட்வர் துறையில் நிறைந்துள்ளனர். அப்படி அவர் சொல்லி இருக்கும் பட்ச்சத்தில் அவர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் அதை விட்டு விட்டு அதை இனவெறியோடு சொல்ல தமிழர்களோடு அவருக்கு எந்த பகையும் குரோதமும் இல்லை என்பதே உண்மை.
தமிழர்களை வேட்டையாடிய இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு எதிராக உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாத ஜெயா, கருணாநிதி போன்ற அரசியல் சாக்கடை வல்லுனர்கள் இதை போல் உள்ள விசயங்களை பெரிதாக்கி தங்களுக்கு தமிழர்கள் மேல் பூரண அக்கறை உள்ளது போல் காட்டி கொள்வது கடைந்தெடுத்த அரசியலே தவிர வேறில்லை என்றே நம்மால் காண முடிகிறது.
ஈழத்திலே இந்திய பயங்கரவாத அமைதி படை தமிழ் பெண்களை கற்பழித்தார்களே, சிங்கள இனவெறி கொடியவர்கள் இசைப்பிரியா, மற்றும் சகோதிரிகளை கற்பழித்து கொன்றார்களே அதை பற்றி நீதி கேட்க்க துப்பில்லாதவர்கள் இதுபோல் விளம்பரம் தேட மறப்பதில்லை. ஒரு இனத்தையே அழித்து ஒழித்த ராஜபக்சே திருப்பதி வந்தது விட்டு போயிவிட்டான் அவனை இந்தியாவுக்குள் நுழைய விட மாட்டேன் என்று சொல்ல துப்பில்லை, தெம்பில்லை, திராணி இல்லை இது போல் விசயங்களை பெரிதாக்கி விளம்பரம் தேடுவதற்கு மறப்பதில்லை.
-மலர் விழி-
6 comments:
Sariya sonneengal malar vili
Yes that is tru
விளம்பரம் தேடி ஈனப்பிழைப்பு பிழைப்பவர்கள்
நல்ல கட்டுரை.
Your statement is really true . . .Your statement is really true . . .
same like you
Post a Comment