Jul 17, 2011

மீண்டும் ஒரு தமிழீழ ஆயுத போராட்டம் கட்டியமைக்கப்படும்!

JULY 18, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு பத்திரிக்கை ASIES தெரிவித்து உள்ளது. இந்த பத்திரிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிப்பது வழக்கம்.

இந்நிலையில் இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்கது.

புலிகள் ஓரணி சேர்ந்து வருகின்றனர் என்று பல நாடுகளின் புலனாய்வாளர்களும் தெரிவித்து உள்ளார்கள். புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பின் ஒரு பகுதி தொடர்ந்தும் பலமாக இருந்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புக்களுடன் சேர்ந்து வெளிநாடுகளில் புதிய வலையமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வருடம் கப்பலில் கனடாவுக்குள் பிரவேசித்தபோது 500 பேர் வரையான தமிழர்கள் பிடிக்கப்பட்டனர். இவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பிரான்ஸ், பிரிட்டன், நோர்வே மற்றும் தென்னாசிய நாடுகள் ஆகியவற்றில் புலி ஆதரவு சக்திகள் நிலை கொண்டு உள்ளார்கள்.

கொரில்லாக்கள் ஒரு போதும் சும்மா இருக்க மாட்டார்கள். 10,000 புலிகள் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கின்றனர். புலிகள் வலை விரிக்கின்றார்களா? என்று பெரிதும் அஞ்சுகின்றது இலங்கை அரசு.

இனிமேலும் புலிகள் ஆயுத போராட்டத்தை தொடர்வார்கள் ஆனால் அது சற்று வித்தியாசமான வியூகங்களை கொண்டதாகவும் ஆயுத பலமே அங்கு மேலோங்கி நிற்கும் எனவும் இராணுவ ஆலோசகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.அவர்கள் படைப்பலத்தை நம்பி போராட்டத்தை ஆரம்பிக்கமாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துள்ளனர்.

அப்படி ஒரு போராட்டம் தொடருமானால் முள்ளிவைக்காலில் நடந்ததை போல பலமடங்கு இழப்பினை இராணுவம் சந்திக்க நேரிடும் என்பதும் உறுதியாக நம்பப்படுகின்றது. இது எவ்வாறு சாத்தியம் என எல்லோருடைய அடிமனதில் எழுகின்ற கேள்வியாகவே இருக்கிறது.

புலம் பெயர் நாடுகளில் இருத்த விடுதலைப்புலிகளின் வலைய அமைப்பு தொடர்ந்தும் வலிமையாகவே இயங்கிக்கொண்டிருகின்றது என்பது தான் இப்பத்திரிகையின் ஆய்வின் முடிவாக அதை பிரசுரித்துள்ளது.அவர்கள் தற்பொழுது ஒன்றிணைகின்றனர்.மேலும் அவர்கள் தாக்குதல் திட்டங்களை வகுத்து அதற்கான ஆய்வினையும் நடத்திகொண்டிருகின்றனர்.

அளவில் சிறு தொகையாக இருந்தாலும் அவர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் இழப்பு பெரிதும் பதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.எது எப்படியாயினும் மகிந்த தமிழர்களுக்கான தீர்வை வழங்கி இராணுவத்தினரை வெளியேற்றா விட்டால் மீண்டும் ஒருநாள் ஆயுத போராட்டம் வெடிக்கும் என்பதில் மற்று கருத்துக்கு இடமே இல்லை.

No comments: