Jun 27, 2011

மகனை காப்பாற்ற உயிர் துறந்த அம்மா!

JUNE 28, கடலூர்: கடலூர் அருகே, விஷ வண்டு தாக்குதலில் இருந்து, மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் உயிரிழந்தார்.

கடலூர் அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பஞ்சாமிர்தம், 35; மகன் மதன்குமார், 11 மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருடன், நேற்று முன்தினம், முந்திரிதோப்பிற்கு சென்றனர்.

"கதண்டு' எனப்படும் விஷ வண்டுகள், மதன்குமாரைத் தாக்கின. மகன் அலறல் சத்தத்தைக் கேட்டு, விஷ வண்டுகள் தாக்காமல் இருக்க, தன் சேலையால் மதன்குமாரை, பஞ்சாமிர்தம் மூடினார். இதனால், விஷ வண்டுகள் பஞ்சாமிர்தத்ததையும் சூழ்ந்து தாக்கின. சற்று நேரத்தில் தாய், மகன் இருவரும், மயங்கி விழுந்தனர்.

 உடன் சென்ற பெண், தகவல் தெரிவித்ததையடுத்து, இருவரையும் படகு மூலம் உப்பனாற்று மேற்கு பகுதிக்கு அழைத்து வந்து, அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேல் சிகிச்சைக்காக இருவரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, பஞ்சாமிர்தம் இறந்தார்; மதன்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1 comment:

தலைத்தனையன் said...

தாயே உன் காருண்யத்தால் தான் இறைவன் உனக்கு நான் செய்யும் தொண்டின் காரணமாக நான் உன் காலடியில் சொர்க்கத்தை தேடிக் கொள்ளலாம் என்றானோ ?

கதண்டு வண்டுகள் போன்ற விஷ கடிகளுக்கு இந்த அப்பாவி மக்களுக்கு ANTI VENOM SHOT அரை மணி நேர தூரத்திலாவது ஆஸ்பத்திரிகளிலும் அல்லது DRUG STORE களிலும் கிடைக்கும்படி செய்யக்கூடாதா?

எங்கெங்கெல்லாம் ஓடி அலைந்திருக்கின்றனர் அந்த இரு உயிர்களையும் எடுத்துக்கொண்டு அந்த அந்த அப்பாவி மக்கள்.

இந்த சம்பவம் வளர்ந்த நாடுகளில் நடந்திருந்தால், ஒட்டு மொத்த நாட்டிலும் குக்கிராமங்களிலிருந்து விரைவில் சென்றடையும் தூரத்தில் இதுபோன்ற விஷ மாற்று மருந்துகளுக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள்.

ஒரு நாடு முன்னேறிவிட்டது, வல்லரசு ஆகிவிட்டது என்பதெல்லாம் புஸ் வானம் போல் விடும் ராகெட்டிலும், அழித்தொழிக்கும் அணு குண்டுகளிலுமல்ல. இதுபோன்ற அப்பாவி மக்களின் உயிர்களையும் காக்க உறுதி மொழி எடுத்து அதன்படி செயல்படும் தலைவர்களை வைத்துத்தான்.