Jun 5, 2011

என் மகள் கனிமொழி ஒரு மலர்!!

JUNE 6, திருவாரூரில் இன்று (5.6,2011) (வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் கலைஞர் கலந்துகொண்டு பேசினார்.

அவர், ’ ’என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ,  அலட்சியத்தாலோ சிறையில் இருக்கிறார்.

வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை.  கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான்.

அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட,  ஒரு கோளாறு பங்குதாரரை பாதிக்க வழி செய்யுமா? என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

இப்பொழுது கனிமொழி சிறையிலே  வாடிக்கொண்டிருக்கிறார்.  திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.  அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி.

சிந்திக்கவும்:  உங்கள் வசனங்களை கண்டு ஏமாந்த காலங்கள் எல்லாம் மலையேறி போயிவிட்டது. சட்டம் தன் கடமையை செய்யும் இந்த வசனம் நீங்கள் ஆட்சி கட்டில் இருக்கும் போது பல சந்தர்ப்பங்களில் சொன்னது தான்.  அதுபோலத்தான் இப்பொழுதும் சட்டம் தன் கடமையை செய்கிறது.

உங்கள் மகள் கனிமொழி மலர் மற்றவர்கள் எல்லாம் களிமண்ணா. நீங்கள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து அரசியலுக்குள் வரும் போது கஞ்சிக்கு வக்கத்தவர். எப்படி இவ்வளவு சொத்துக்கும் அதிபதி ஆக முடிந்தது.

மற்ற கொள்ளைக்காரன் எல்லாம் வெளியே இருக்கான் என் குடும்பத்தினர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை இது உங்கள் கேள்வியாக இருக்குமே ஆனால் அதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம்.

அதை விட்டு விட்டு கொள்ளை அடிக்கவில்லை என்று வீர வசனம் எல்லாம் பேச வேண்டாம். பலநாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான். ஒழுங்கான ஆட்சி வந்து எல்லா கொள்ளைக்காரர்களையும் பிடிக்கணும் என்பதுதான் மக்களின் விருப்பம்.

1 comment:

தலைத்தனையன் said...

அரசியல் கூட்டணி என்பதற்காக எந்த தவறு செய்தாலும் ஒரு கட்சிக்கு கடைசிவரை ஒத்து ஓதிக்கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுபோன்ற ஆகாத ஒத்துழைப்பு இருந்தால், உம்மைப் போன்ற அரசியல் தலைவர்களும், தொண்டரடிபடையினரும்தான் இந்தியாவில் மிஞ்சுவர். எம்மைப்
போன்ற சாதாரணர்கள் செத்து தொலையவேண்டியதுதான்.

உம்மைபோன்றவர்களை குறை சொல்வதால் காங்கிரஸ்காரர்கள் தூயவர்கள் என்று சொல்ல வரவில்லை.
உணரவும்.