May 14, 2011

மீனவர்கள் பிரச்னைக்கு உறுதியான நடவடிக்கை எடுப்பேன்!!

May 15, ராமநாதபுரம்: தி.மு.க., வின் அராஜக அடாவடி குடும்ப ஆதிக்க ஊழல் ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்து தமிழக மக்கள் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர் என ம.ம.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

அவர் கூறியதாவது: ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பாக ம.ம.க., வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு பெருவாரியாக ஓட்டளித்த தொகுதி மக்களுக்கு நன்றி.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்து வந்த தி.மு.க.,வின் அராஜக, அடாவடி குடும்ப ஆதிக்க, ஊழல் ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து, பணபலத்தையும் தகர்த்து ஓட்டளித்து பெரும் மவுன புரட்சியை ஏற்படுத்திவிட்டனர்.

ராமநாதபுரம் தொகுதியை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்து மக்கள் சேவகனாக செயல்படுவேன். மீனவர்கள் பிரச்னைக்கு உறுதியான நடவடிக்கை எடுப்பேன், என்றார்.

No comments: