May 14, 2011

தூய்மை இறை நம்பிக்கையின் ஒரு பகுதி!!

14 May, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இந்த நாள் வரை சென்னை நகரில் நடை பாதையில் வாழும் மக்களுக்கு முறையான இருப்பிடம் இல்லாது அவதிப்படுகிறார்கள். இது மனிதாபிமான அடிப்படையில் எடுக்கவேண்டிய நடவடிக்கை மட்டுமல்ல.

சிங்காரச்சென்னை என்ற திட்டத்தை அமல்படுத்தி சென்னை நரரை அழகு படுத்த ஆரம்பித்த செல்வி ஜெயலலிதா அந்த திட்டத்தை தொடருவதன் மூலம் நடைபாதை மக்களுக்கு வாழ்வு கொடுத்தால் சிங்காரச்சென்னை திட்டம் முழுமையாகும்.

கேரளா போன்ற மாநிலங்களில் பொது கழிப்பிடங்களும் அதை பராமரிக்க நல்ல நிர்வாக நடைமுறைகளும் இருப்பதால், வெளியே அசிங்கங்களும் துர்வாடைகளும் அதனால் உண்டாகும் வியாதிகளையும் கட்டுப்படுத்துவதுபோல் நாமும் நல்ல சுகாதாரமான சுற்று சூழலை உருவாக்குவோம்.

இங்கு ஒரு சிறிய ஆனால் நடந்த உண்மை சம்பவத்தை சொல்கிறேன். தமிழ் நாட்டிலிருந்து கேரளாவிற்கு சென்ற ஒரு சிறிய 4, 5 பேர் கொண்ட சுற்றுலா குழு. கேரளாவைச் சென்றடைந்ததும் அங்குள்ள மலைப்பகுதியில் தங்கள் இயற்கை கடனை கழித்துவிட்டு எழும்பொழுது, அங்கு மலைப்பகுதியில் வேலை செய்யும் மக்களால் பிடிக்கப்பட்டு தங்களின் கழிவுகளை தாங்களே அப்புறப்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

நம் தமிழ் மக்களின் இந்த நடவடிக்கைகளை மும்பை போன்ற மாநகரங்களிலும் காணலாம். தாராவி என்ற உலகின் மிகப் பெரிய சேரிப் பகுதியே அதற்கு எடுத்துக்காட்டு. எனவே தூய்மையை குழந்தைப் பருவத்திலேயே போதிப்பதும் அரசுகள் இதுபோன்ற நல் ஒழுக்கங்களில் மக்களின் கவனத்தை ஈர்பதுடன் அதற்க்கான நடை முறை சாத்தியங்களை உண்டாக்குவதையும் கடமையாய் கருதி செயல்படவேண்டும்.

பொது இடங்களில் கழிப்பிடங்கள் கண்டிப்பாய் அமைத்து அதை நிரந்தரமாக சரியாக பராமரிக்க வழிவகை செய்யவேண்டும்.

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.