![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgpsofT_6zcVhS-Iudt2UEeUYwowqoLqrO5ynMUVWSmc0vBFmsJ0DOLVJMcfreRvJc9rLvT_UdKG-VWN4vZot0dvwe9C9G_wFNWNiTsTYzGGj1zi2N7uTUNzlilBAy5pqgTfussmYPS4bM/s200/RuleofLaw-300x224.jpg)
ஆட்சியில் பொறுப்பு வகிக்கும் முன்பே புதிய கட்டிடத்திலிருந்து பழைய கட்டிடத்திற்கே சட்டசபையை மாற்ற செலவு செய்யும் தொகையோ 50 கோடி ரூபாய். பல்லாயிரக்கணக்கான நூல்கள் இருக்கும் நூலகத்தை மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றுவது. இதன் காரணமாய் எத்தனை நூல்கள் பழுதாக வாய்ப்புள்ளது.
எவ்வளவு காலவிரயம்? பொருள் நட்டம்? இந்தக்காலங்களை மக்களுக்கு பனி செய்வதிலும் மக்கள் நலத்திட்டங்களைக்குறித்து அதிகாரிகளை கலந்து ஆலோசிப்பதில் செலவிடலாம். மழை நீர் வடிகால்களை ஏற்படுத்துதல், நீர்நிலைகள், நீர்த்தேக்கங்களை ஆழப்படுத்துதல் என்று நல்ல பல திட்டங்களுக்கு இந்த 50 கோடி ரூபாயை செலவு செய்யலாம்.
ஒரு அரசு ஆட்சி செய்யும் மண்ணில் பல மதம், நம்பிக்கை சார்ந்த மக்கள் இருப்பார்கள். அந்த நம்பிக்கை சார்ந்த மக்களை கொன்றொழித்த, சின்னாபின்னப்படுத்திய, பச்சிளம் பாலகர்களையும் கூட தீயிலிட்டு பொசுக்கிய ஒரு கிராதகத்தலைவனின் வெற்றிக்காக சென்று வாழ்த்திவிட்டு வருவதால் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு மன வேதனை அடைவார்கள்? It shows nothing but a totalitarian administration.
எனவே எல்லா மக்களின் எண்ணத்திற்கு தகுந்ததுபோல் நடக்கமுடியாதுதான் ஆனால் நியாய உணர்வுடன், மனிதாபிமானத்திற்கு கட்டுப்பட்டு நடக்கலாமே. அல்லது வெகு விரைவில் புறம் தள்ளப்படுவீர்கள்.
No comments:
Post a Comment