APRIL 24, நடிகர் விஜய் திமுக தரப்பினர் மீது கொண்ட கோபத்தால் அதிமுகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.
பல ஆண்டுகளாக திமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்த விஜய் தந்தை எஸ். ஏ.சந்திரசேகர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து தான் இயக்கிய ‘’சட்டப்படி குற்றம்’’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு ஜெயலலிதாவை தலைமையேற்குமாறு கேட்டார்.
அதற்கு ஜெயலலிதா, ‘’தேர்தல் பிரச்சாரத்திற்கு சில நாட்களே இருப்பதால் இப்போது என்னால் இந்த விழாவில் பங்கேற்க முடியாது.
அதனால் இன்னொரு பெரிய விழாவில் நிச்சயம் பங்கேற்று சிறப்பித்து தருகிறேன் என்று உறுதி அளித்தார். பின்னர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவாரா? மாட்டாரா? என்று சூழல் இருந்தது.
இந்த நிலையில் எஸ்.ஏ.சி. ஜெயலலிதாவிடம், ‘’விஜய் வேனில் சென்று பிரச்சாரம் செய்வதற்கு இப்போது விரும்பவில்லை. அதனால் கூட்டணிக்கட்சியின் பொதுக்கூட்டம் நடத்துங்கள். அதில் விஜய் பங்கேற்று பேசுவார் என்று கூறியிருந்தார்.
கூட்டணிக்கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் விஜய் பங்கேற்கவில்லை. ஆனால் மேடையில் கூட்டணிக் கட்சியினரோடு விஜய்யின் படமும் இடம்பெற்றிருந்தது.
விஜய்க்கு பதிலாக எஸ்.ஏ.சந்திரசேகர் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் பதட்டமான சூழ்நிலையில் விஜய் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இந்த தாக்குதலுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் விஜய் நடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேலாயுதம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த விழாவிற்கு தலைமையேற்று சிறப்பித்து தருவதாக எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உறுதி
அளித்துள்ளாராம் ஜெயலலிதா.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ethku platformla amma ayya pithai podunga eppadikatkalam pongadaunga polapu oru polapa
Post a Comment