Apr 14, 2011

மோடிக்கு புகழாரம் காலியாகும் அன்னா ஹசாரே கூடாரம்!!

அஹ்மதாபாத்: குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை புகழ் நரேந்திர மோடியை புகழாரம் சூட்டியதற்கு அன்னா ஹஸாரே அளித்த விளக்கம் அவருடைய ஆதரவாளர்களுக்கு திருப்தியளிக்கவில்லை.

ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை விட்டு விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
குஜராத்தின் கிராம வளர்ச்சித்திட்ட முன்மாதிரியை கவனத்தில் கொண்டு தான் மோடியை புகழ்ந்ததாக நாட்டிய கலைஞரும், சமூக சேவகருமான மல்லிகா சாராபாய்க்கு எழுதிய கடிதத்தில் அன்னா ஹஸாரே குறிப்பிட்டிருந்தார்.

குஜராத்தில் நடந்த கொடூரங்கள் பற்றி பேசாது மோடியின் கிராம வளர்ச்சி முன்மாதிரியை பேசி இருப்பது பற்றி தாங்கள் கேள்வி எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் இணந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஹஸாரேவின் அறிக்கைக்கு நன்றி தெரிவித்து நரேந்திரமோடி கடிதம் எழுதியிருந்தார்.

வகுப்பு வாதத்தையும், அரசியலையும் குறித்து தெளிவில்லாத விளக்கத்தை ஹஸாரே அளிக்கிறார். 2002 முஸ்லிம் இனப் படுகொலையில் குஜராத் அரசின் பங்கினைக் குறித்து ஹஸாரே பேசக்கூட இல்லை, என சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தங்களின் குற்றங்களை மறைப்பதற்காக குஜராத்தில் வளர்ச்சி என்ற மாயையை அடையாளங் காண வேண்டுமென அவர்கள் ஹஸாரேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள், தொழிலாளிகள், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக மோடியின் அரசு செயல்படுகிறது.

குஜராத்தில் ஏகாதிபத்திய ஆட்சிக்கு புகழாரம் சூட்டிய ஹஸாரேவின் நடவடிக்கை எங்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத் மக்கள் சிவில் உரிமை(பி.யு.சி.எல்) தலைவர் ஜெ.எஸ்.பந்தூக் வாலா இவரை கடுமையாக கண்டித்தார்.

மனித உரிமை இயக்க இயக்குநர் பிரசாந்த், பேராசிரியர் ஃபெடரிக் பிரகாஷ், ரோஹித் பிரஜாபதி, திருப்பதி ஷா, நந்தினி மஞ்சரேக்கர் ஆகியோர் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். மோடியை புகழ்த்தியதை வாபஸ் பெற மல்லிகா சாராபாய் ஹஸாரேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

3 comments:

Unknown said...

பாவம் ஹசாரே, பிள்ளையார் பிடிக்க குரங்காகி விட்டது போலிருக்கே

Organic Farmer said...

அன்னா ஹசாரே மோடியை குறித்து எந்த கருத்தில் பேசினார் என்பதை கருத்தில் கொள்ளாமல் கூடாரம் காலியாகுகின்றது
என்ற தலைப்பில் எழுதயுள்ளிர். ௭௫ வயதான அன்னா ஊழல் போராட்டத்தை நடத்த தேவைப்பட்டார் . இத்தனை கோடி மக்கள் தொகையில் எண்ணற்ற அரசியல் வாதிகள் , சமூக ஆர்வலர்கள் , நியாமான எண்ணங்கள் உடையோர் பலர் இருந்த போதிலும் ஊழலுக்கு எதிர்த்து போராட கிழவன் தேவைப்பட்டான். மோடியை ஆதரித்ததால் ஓர் இரவில் கூடாரம் காலியாகி விட்டதாம் . ங் சுதந்திரம் பெற்று இது களம் தெரிய வந்த ஊழல் விவரங்கள் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது . பதிவு செய்த நீங்களும், பின்னூட்டம் எழதிய அன்பரும் (கருத்து சுதந்திரம் உங்களுக்கு உண்டு) அண்ணாவின் நீண்ட கால முயிற்சியினால் ரேலோகோன்சிட்தி என்ற கிராமத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்தி இன்று உலக நாடுகள் கவனத்தை ஈர்த்தவர் . ஏதோ பேசினார் கூடாரம் காலி ஓகே நோ ப்ரோப்ளம் . ஆனால் பிரச்சனை உமக்கும் உங்கள் வருங்கள சன்னதியினருக்கு தான். மனதில் நன்றாக இருத்தி வையுங்கள் .

Anonymous said...

nantraha naadagam aaduhiraan HASAREA