
ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். நடிகர் ரஜினிகாந்த் நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது.
பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது. அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை.
அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர். இந்த விசயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போதாதென்று மக்கள் கடுமையான விலைவாசியால் அவதிப்படுகிறார்கள். நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும் என்று அதிரடியாக பேட்டியும் அளித்து பரபரப்பூட்டினார்.
இந்த நிலையில், நேற்று மாலையே திமுக தலைவர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல். காலையில் ஏற்பட்ட பரபரப்பினால் ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள்.
ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள். படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது கவிஞர் வைரமுத்துவின் மூலமாக தனது கோபத்தை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்தினாராம் திமுக தலைவர் கருணாநிதி.
இதனால் படம் முடிந்ததும் சகஜமாக எல்லோரிடமும் பேசாமல் காரில் ஏறிப் பறந்தாராம் ரஜினி.
No comments:
Post a Comment