ஏப்ரல் 15, உலகின் சக்திவாய்ந்த நூறு தலைவர்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் பத்திரிகையின் 2011ம் வருடத்தின் உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சே இடம்பெற்றுள்ளார்.
ராஜபக்சே, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் பின்தள்ளி 28ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். ஒபாமா 41ம் இடத்தில் இருக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஷ இராணுவ ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடித்த உலகின் ஒரே தலைவர் என்று டைம்ஸ் பத்திரிக்கை குறுப்பிட்டுள்ளது.
இதற்கிடையே பட்டியலில் இடம்பெறுவதற்காக ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன வழியாக கோடிக்கணக்கான ரூபாவைச் செலவிட்டே ராஜபக்சே அப்பட்டியலில் இடம்பிடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிந்திக்கவும்: இது டைம்ஸ் பத்திரிக்கையின் ஓர் விசமத்தனமான கருத்து கணிப்பு. ஒரு தீவிரவாதியை, போர்குற்றவாளியை, பயங்கரவாதியை எப்படி? சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் கொண்டுவர முடிந்தது. இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
கொத்து கொத்தாக ஈழதமிழர்களை கொன்று குவித்த கொடூரனுக்கு சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் அதுவும் ஒபாமாவுக்கு முன்பாக இதுவே இந்த பத்திரிக்கையின் அயோக்கியத்தனத்தை படம்பிடித்து காட்டுகிறது.
உலக சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்த பயங்கரவாதிக்கு எப்படி இடம் கொடுக்க முடியும். தமிழர்களை கொன்று குவித்ததால் இந்த பட்டமா? பயங்கரவாதி ராஜபக்சேயை போர் குற்றங்களுக்காக உலக அரங்கில் நிறுத்தப்படும் இந்த வேலையில் இப்படி ஒரு பட்டியல் வெளியிடா?.
டைம்ஸ் பத்திரிக்கை இதற்க்கு விலையாக எத்தனை கோடி டாலர்கள் பெற்றார்கள். சீக்கிரம் வெளிவரும் இந்த உண்மைகள். இந்த பயங்கரவாதிகள் நிச்சயம் மக்கள் மன்றத்தில் தண்டிக்கபடுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment