ஏப்ரல் 15, புதிய தமிழகம் போட்டியிட்ட ஓட்டப்பிடாரம், நிலக்கோட்டை உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக, கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றிபெறும் என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். எனினும் இதையும் மீறி பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது.
எனினும், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் குடும்ப ஆட்சி, கடுமையான விலைவாசி உயர்வு, தொடர் மின்வெட்டு, மத்திய, மாநில அரசுகளின் ஊழல் உள்ளிட்ட பிரச்னைகள் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை வாக்களிக்கச் செய்துள்ளன.
அதன் எதிரொலிதான் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. அதிமுக, கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றிபெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
இத் தேர்தலில் அதிமுக கூட்டணி மூலமாக அரசியல் தளத்தில் மட்டுமன்றி சமூகத் தளத்திலும் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் சேருவதற்கு காரணமே தென் தமிழகத்தில் சமூக நல்லிணக்கம், தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment