APRIL 23, ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை பிரிவு தலைவர் அபிஷேக் சிங்கி கூறினார்.
நாட்டில் ஊழலில் ஈடுபட்டு உள்ளவர்களே ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசில் ஊழல் அதிகரித்து விட்டது. இதற்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
2ஜி ஊழலை ஆரம்பித்து வைத்தவர்களே இவர்கள்தான். அதை பின்பற்றிதான் திமுகவின் ராசா இதை செய்தார். பா.ஜனதா பிரமுகர்களே ஊழலில் சிக்கி உள்ளதால் அவர்களுக்கு லோக்பால் மசோதா பற்றி பேச தகுதி இல்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment