APRIL 23, கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோடு, நேதாஜி நகரில் வசித்தவர் நடராஜன் (24); இப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.
ஆறு மாதங்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு, போத்தனூரை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.
போனில் பேசிய அவர் வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அவருடன் பேச வேண்டும் என கூறியுள்ளார்.
எதிர்முனையில் பேசிய நடராஜ் சாரி நீங்கள் தொடர்பு கொண்டது ராங் நம்பர் என்றார். ஆனால் சில நாட்களில் ராங் நம்பர் நபர் நண்பரானார்.
இருவரும் தொடர்ந்து போனில் நட்பை வளர்த்தனர். காலப்போக்கில் நட்பு காதலானது. ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதலை வளர்த்துக் கொண்டனர்.
காதலில் விழுந்த இருவரும் நேரில் பார்க்க வேண்டும் என திட்டம் தீட்டினர். நான்கு நாட்களுக்கு முன், நேரில் சந்திக்கக்கூடிய இடத்தை தேர்வு செய்து சந்தித்தனர்.
அழகிய குரலில் அசத்திய காதலி அழகில் மயக்குவாள் என்ற எதிர்பார்ப்புடன் குறித்த நேரத்தில் அங்கு வந்தார் நடராஜ்.
ஆனால் காதலி தான் எதிர்பார்த்தது போல இல்லை என்று நொந்து போன நடராஜ் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்தார். அந்தப் பெண்ணின் நடராஜூக்கு காதல் கசந்தது.
போன் அழைப்பை ஏற்க மறுத்தார். தனது சகாக்களிடம் குரலை கேட்டு ஏமாந்து விட்டதாக பலமுறை புலம்பியும் உள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு, பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். நடராஜின் தந்தை சந்திரபோஸ், அரசு மருத்துவமனையில் அடையாளம் காண்பித்து, சடலத்தை பெற்றுச் சென்றார்.
சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்ததில், "முகம் பார்க்காமல் காதலித்தோம்; இப்படி ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை' என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்திக்கவும்: உண்மையான அன்பு, காதல், இவற்றிக்கு நிறமும் இல்லை! மொழியும் இல்லை. வயதும் இல்லை. அழகும் இல்லை. இதை புரிந்து கொள்ளமுடியாத போலி காதல் இப்படிதான் தற்கொலையில் முடியும். காதல் என்பது மனதை காதலிப்பது உடலை அல்ல.

No comments:
Post a Comment