
சிந்திக்கவும்: இலங்கையில் போரை உருவாக்கவும், இந்தியத் தலைவர்களைக் கொல்லவும் அமெரிக்காவைச் சேர்ந்த ருத்ரகுமாரன், நார்வேயின் நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோர் தமிழகத்தில் பயிற்சி முகாம்களை நிறுவியுள்ளதாக குற்றம்சாட்டியிருப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தமிழக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்தார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ரகசிய பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும்வகையில் டிஜிபி மேற்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புலிகள் குறித்து தமிழக போலீசின் புலனாய்வுத் துறை விழிப்புடன் இருந்து கண்காணித்து வருகிறது. கடலோர பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என லத்திகா சரண் தெரிவித்தார்.
எந்த ஒரு விடுதலை போராட்டத்தையும் பார்த்து பயங்கரவாதம் என்ற சொல்லை பிரயோக படுத்த முடியாது. ஈழ விடுதலை போராட்ட வீரர்கள் நேதாஜியை போன்றவர்கள் ஆவர். நாம்மால் எப்படி நேதாஜியை பார்த்து பயங்கரவாதி என்று சொல்ல முடியாதோ அது போல் தான் இதுவும். இந்திய அரசே ஒரு காலத்தில் புலிகளுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறது. இந்திரா காந்தி சொன்னார் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் தமிழர்கள் என்று. சிங்களவர்கள் வந்தேறிகள். ஆகவே தனிதமிழ் ஈழம் என்பது அமைந்தே தீரும். இது ஒவ்வொரு தமிழனின் கனவு, லட்சியம் ஆகும். ஈழ போர் களத்திலே சிங்கள காடையர்கள் எம்குல பெண் வீராங்கனைகளுக்கு பதில் சொல்ல முடியாத பேடிகள் என்பதை வரலாறு பதிந்துள்ளது.
இனி ஈழ தமிழர் போராட்டம் தமிழ் நாட்டில் இருந்துதான் தொடங்கும். முதலில் தனி தமிழ் நாடு உருவாக்கப்படும் பின்னால் தனி தமிழ் ஈழம் உருவாக்கப்படும். இந்தியா என்பது அதில் உள்ள அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது. அப்படியிருக்க அதில் அங்கம் வகிக்கும் மாநிலங்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும். ஆறு அரை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்து விட்டு. இலங்கைக்கு ராணுவ உதவி செய்து தமிழர் போராட்டத்தை ஒழிக்க நினைத்த இந்தியா இதற்க்கான விலை கொடுக்க வேண்டி வரும். தமிழர் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. இந்தியாவின் பயங்கரவாத சூழ்ச்சிகள் விரைவில் முறியடிக்கபடும். ஈழத்தமிழர் போராட்டத்தை சிதைக்க இந்திய & இலங்கை இரண்டும் சேர்ந்து செய்யும் கூட்டு சதியாகவே இதை பார்க்க முடிகிறது.
அன்புடன்: தமிழன்.
2 comments:
//முதலில் தனி தமிழ் நாடு உருவாக்கப்படும் பின்னால் தனி தமிழ் ஈழம் உருவாக்கப்படும்.//
நிச்சயமாக நடக்கும்.
நாளை நமதே, நாடும் (தமிழ் & ஈழம்) நமதே.
//முதலில் தனி தமிழ் நாடு உருவாக்கப்படும் பின்னால் தனி தமிழ் ஈழம் உருவாக்கப்படும்.//
நிச்சயமாக நடக்கும்.
நாளை நமதே, நாடும் நமதே(தமிழ் & ஈழம்).
Post a Comment