Mar 26, 2011

வைத்த ஐஸில் ஜன்னி வந்திருச்சி!! கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா!!

சென்னை, மார்ச். 26-தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பா.ஜ.க. முன்னாள் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

தமிழகத்தின் முக்கிய இரு கட்சிகளான தி.மு.கவும்,அ.இ.அ.தி.மு.கவும் இலவசங்களை அள்ளி வீசி தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டன.

தமிழர்களை சோம்பேறிகளாக்கும் அதேவேளையில் வேலை வாய்ப்பிற்கோ, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித அறிவிப்புகளும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் புறம்போக்கு கட்சியான பா.ஜ.க ஏதோ அடுத்து தாங்கள்தாம் ஆட்சிக்கு வருவதைப் போல கனவு கண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

புறம்போக்கு கட்சி எனக் கூறக் காரணம், தமிழகத்தின் பிரபலமான எந்த சிறுகட்சியும் கூட இவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* தமிழர்களின் உண்மையான புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்.

* சிறுபான்மை மாணவி களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

* அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும்.

* மாணவர்களுக்கு வருட தொடக்கத்திலும், தேர்வு நேரத்திலும் பேனா, பென்சில் இலவசமாக கொடுக்கப்படும்.

* அரசு பள்ளிகளில் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படும்.

* 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு யோகா, தியானம் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும்.

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டு இலவச பால் கொடுக்கப்படும்.

* பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பெயரில் வங்கியில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.

* ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும்

* சுய உதவிக்குழுக்கள் மூலம் “நாப்கின்”கள் தயாரித்து ஏழைப் பெண்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக கொடுக்கப்படும்.

* பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.

* இரட்டை தம்ளர் முறை ஒழிக்கப்படும்.

* நதிநீர் இணைப்பு கொள்கைப்படி தமிழக நதிகள் இணைக்கப்படும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

* விவசாயத்துக்காக தனிபட்ஜெட் போடப்படும்.

* மலிவு விலையில் விவ சாயிகளுக்கு விதைகள் கொடுக்கப்படும். மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பது தடை செய்யப்படும்.

* ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒரு கறவை பசு மாடு இலவசமாக கொடுக்கப்படும்.

* கச்சத்தீவை திரும்ப பெற்று தமிழர்களின் மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்.

* அரசே சூப்பர் மார்க் கெட் நடத்தும். * மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

* பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். அதுவரை விவசாயிகள் நலன்கருதி கள் இறக்க அனுமதிக்கப்படும்.

* இந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

* அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும்.

* வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றும் உரிமை ஆகாது. எனவே அச்சுறுத்தி ஆசைகாட்டி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகும். எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்.

அவர் மேலும் கூறுகையில் பா.ஜ.க. சார்பில் 194 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: இவர்கள் பின் பற்றும் வர்ணாசிரம் கொள்கைதான் தீண்டாமையை ஆதரிக்கிறது. இந்த தீண்டாமை உண்டானதே இவர்களது ஹிந்த்துதுவா வர்ணாசிரம கொள்கை மூலம்தான் அப்படி இருக்க எப்படி இவர்கள் இதை எல்லாம் ஒழிக்க போவதாக தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்கிறார்கள்.

தலித் மக்கள் அர்சகராக எப்படி உங்கள் ஆன்மிக குரு சங்கராச்சாரியார் ஒத்துகொள்வார். இவர்களுக்கு எப்போதிருந்து தமிழர்கள் மேல் தமிழ் மேல் அக்கறை வந்தது. இவர்கள் சமஸ்கிருதத்தை தூக்கி பிடிபவர்கள் ஆச்சே! இவர்கள் எப்படிதான் பசுதோல் போத்தி வந்தாலும் இவர்கள் காட்டு மிருகம் ஆகிய புலி என்று எல்லாருக்கும் தெரியும்.

1 comment:

பொற்கோ said...

அண்ணாச்சி! தமிழை தீண்டத்தகாத மொழி என்று கூறும் சங்கரமடத்தை புறக்கணிப்பீர்களா? சொல்லுங்க என் ஒட்டு ஒங்களுக்கு தான்!