மார்ச் 31, விஜயகாந்தை வீழ்த்த நகைச் சுவை நடிகர் வடிவேலுவை களமிறக்கியது திமுக. வடிவேலுவும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் இடங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சரமாரியாகத் தாக்கிப் பேசி வருகிறார்.
வடிவேலுவைச் சமாளிக்க தேமுதிகவும் நகைச்சுவை நடிகர் ஒருவரை களம் இறக்கத் திட்டமிட்டுள்ளது. வடிவேலுவுடன் முட்டி மோதிய நகைச் சுவை நடிகர் சிங்கமுத்துவை தேமுதிகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அணுகியுள்ளதாகத் தெரிகிறது.
இன்னும் ஓரிரு நாளில் நகைச் சுவை சிங்கமுத்து வடிவேலுவுடன் மல்லுக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment