பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க., நேற்று அறிவித்தது. எதிர் வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.,வும், காங்கிரசும் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், உடன்பாடு காண முடியவில்லை.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை, 60 இடங்கள் கேட்டு, அதற்கு தி.மு.க.,வும் ஒப்புக் கொண்ட பிறகு, தற்போது, 63 இடங்கள் வேண்டும் என்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பர் என்பதும், இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் தி.மு.க., தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து, மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இடம் பெற விரும்பாமல், தி.மு.க., தன்னை விடுவித்துக் கொண்டு, பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவை இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு எடுத்துள்ளது.முதல்வர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் அழகிரி உட்பட, 28 பேர் கலந்து கொண்டனர்.தி.மு.க.,வின் அறிவிப்பை அடுத்து, கடந்த ஏழாண்டு காலமாக அந்தக் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொடர்ந்த உறவு முறிந்துள்ளது.
சிந்திக்க: மூன்று தொகுதிகளுக்காக கூட்டணியை முறித்த கருணாநிதி அன்று ஈழ தமிழர்களை கொல்லும் போது இதை செய்திருந்தால் இவர் உண்மையிலே தமிழர் தலைவர் என்று வரலாறு பதிந்திருக்கும். இப்பொது தமிழர்களின் ஆதரவை இழந்து நம்பி இருந்த காங்கிரஸ் காலைவாரிவிட்டது அந்தோ பரிதாபம். கருணாநிதிக்கு தோல்வி நெருங்கி விட்டது தமிழர்களுக்கு செய்த துரோகம் இப்ப இரண்டும் கெட்டான் நிலை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஏமாறாதே ஏமாற்றாதே.....! இது எல்லாம அரசியலில் சகஜமப்பா. நாளைக்கு கருநாய்நிதி இத்தாலி கொலைகாரியின் கால்களில் வீழலாம். யார் கண்டது. கண்துடைப்பு நாடகங்கள் நன்றாகவே அரங்கேற்றப்படுகின்றது. தமிழன் இழிச்சவாய் முட்டாள்கள் என்பது மாநிலததிற்கு மட்டுமல்ல மத்திக்கும் நன்றாகவே தெரியும்.
Post a Comment