கொழும்பு, மார்ச்22: லிபியாவின் நிலை மிக விரைவில் இலங்கையிலும் வரலாம் என்றும் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையில் தன்னை சந்திக்க வந்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. பாலித ரங்கே பண்டாரவிடம், அவர் இவ்வாறு கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் வாழ்க்கைத் தரம் மட்டுமின்றி, வாழ்வதற்கான சுதந்திரமான சூழலும் இல்லாமல் போய்விட்டது என்றும், அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோதப் போக்குகள் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் பொன்சேகா கூறினார்.
எனவே, மிக விரைவில் அதிபர் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அப்போது மக்களை யாராலும் தடுக்கவோ அடக்கவோ முடியாது என்றும் பொன்சேகா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிந்திக்கவும்: இலங்கையில் புரட்சி நிச்சயம் ஏற்படும். அது சிங்கள பேரினவாத தலைவர்களால் அல்ல. இந்த பொன்சேக ராணுவ தளபதியாக இருந்து தமிழர்களை கொன்று குவித்து விட்டு இப்பொது நீலிகண்ணீர் வடிக்கிறார். இவர்களின் சாக்கடை அரசியலை நம்பி தமிழர்கள் இனிமேலும் ஏமாற தயாராக இல்லை.
தனி தமிழ் நாடு அதுதான் நமது குறிக்கோள், கொள்கை என்ற ஒரு கூட்டம் உருவாகும் அவர்கள் செய்வார்கள் புரட்சி. அந்த புரட்சியில் இந்த ராஜபக்சே கூட்டங்கள் அழித்து ஒழிக்கப்படும். ஒவ்வொரு தமிழனுடைய குறிக்கோளும் தனி தமிழ் ஈழம் அமைப்பதே. அதை அடைய ஒற்றுமையோடு, தமிழர் சிந்தனைகளை ஒருங்கிணைத்து போராடுவதே சிறந்த வழி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment