
தற்போது நகராட்சி, பேரூராட்சிகளில் சுவர் விளம்பரங்கள் எழுதவேக் கூடாது என்றும், ஊராட்சிப் பகுதிகளில் வீட்டின் உரிமையாளரின் அனுமதியைப் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரின் அனுமதியை பெறுவதுடன், அந்த ஒப்புதல் கடிதத்தை, தேர்தல் அலுவரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
வீட்டின் உரிமையாளரே தங்கள் சுவற்றில் தேர்தல் விளம்பரம் எழுத வேண்டும் என்றாலும், முறையாக தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பிறகே எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விளம்பரங்கள் எழுதுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறினால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம்.
சென்னை புறநகர் பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விதிமுறைகளை
மீறி செயல்பட்டால் 90424 00100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை புறநகர் ஆணையர் ஜாங்கிட் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் புகார் மையம் 24 மணி நேரமும் செயல்படும்
.
வேட்பாளர்களின் கறுப்பு பணம் குறித்து தகவல் தருவோருக்கு சன்மானம் சென்னை வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரி கூறினார். சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கலின் போது, வேட்பாளர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் உள்ளிட்டவற்றுடன், கடந்த மூன்று ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்ததற்கான ஆதாரம், வருமான வரி செலுத்தாத பட்சத்தில், நிரந்தர கணக்கு எண்(பான் எண்) குறித்த விவரங்களை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் தங்களின் உண்மையான வருமானத்தை மறைத்து வருமான வரி செலுத்தியிருக்கும் பட்சத்தில், அவர்களின் கறுப்பு பணம் குறித்தும், அப்பணத்தை கொண்டு, அவர்கள் ஏதாவது சொத்துகள் வாங்கியிருந்தால், அவற்றை பற்றிய தகவல்களையும்,
1800 425 6669, 044 - 2824 0064 ஆகிய எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இத்தகவலை ஆராய்ந்து, வேட்பாளரிடமிருந்து பெறப்படும் கறுப்பு பணத்திற்கு உரிய வருமான வரி, அபராதம் மற்றும் வட்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். மேலும், வசூலிக்கப்படும் வரி பணத்தில் 10 சதவீதம், தகவல் தருவோருக்கு சன்மானமாக வழங்கப்படும். இந்த சன்மானத்தைப் பெற, தகவல் தருவோர் தங்களின் அடையாள சான்றுடன், வருமான வரித் துறையினர் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். இவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment