
கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் தற்போது அ.தி.மு.க. அணியில் உள்ளன. தே.மு.தி.க.வும், அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 41 இடங்களை வாங்கிக் கொண்டது. எனவே, நீங்கள் கேட்கும் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அ.தி.மு.க. தரப்பில் ம.தி.மு.க. நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டணி கட்சிகள் சமரச முயற்சியால் ம.தி.மு.க.வை சேர்க்கவேண்டும் என வற்புறுத்தி உள்ளன. இதனால் அ.தி.மு.க. இறங்கி வந்து ம.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க முன்வந்ததாகவும் ம.தி.மு.க.வுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 comments:
மதிமுகவிற்கு அதிமுகவிற்கும் இப்போது எந்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற வில்லை. இது தினமலரும் தினமணியும் அவர்களாகவே பங்கிட்ட பங்கீடுகள் .மதிமுக தனித்து போட்டியிடுவது உறுதி இது பற்றிய அறிவிப்பு நாளை வரும்
ம தி மு க சரண்டர் ஆவதை தவிர வேறு வழியில்லை. தனித்து போட்டியிட்டால் கேப்டன் நிலைதான் ஏற்படும்
Post a Comment