
இப்பேச்சுவார்த்தையில், மூன்றாவது அணி அமைத்தால் தங்களுக்கு அது பாதகமாக மாறிவிடுமோ என அஞ்சி மூன்றாவது அணி குறித்த உறுதியான முடிவை எடுக்க அவர்கள் தயங்கினர். மேலும் தி.மு.க வெற்றிப்பெற்று விடவும் அது வாய்ப்பாக அமைந்து விடுமென்பதால், மூன்றாவது அணி அமைப்பதாக கூறி ஜெயலிதாவை மிரட்டி வழிக்கு கொண்டுவரும் வேலையில் இவர்கள் ஈடுபட்டு வருவாதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அ.இ.அ.தி.மு. கவும் தனது பிடிவாதத்தை தளர்த்திவிட்டு கூட்டணிக் கட்சிகள் விரும்பும் தொகுதிகளில் சிலவற்றை விட்டுக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க தரப்பில் கூட்டணி கட்சியினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
1 comment:
any how ,this govt. should be removed
Post a Comment