எப்ரல் 1, அ.தி.மு.க. அணிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அந்த அணி தலைவர் ஜெயலலிதா கொள்கையை பற்றியோ, வாக்குறுதிகள் மற்றும் திட்டங்கள் பற்றியோ பேசாமல் தனிப்பட்ட முறையில் தரமற்ற விமர்சனங்களை செய்து வருகிறார்.
எந்த ஒரு மாநிலத்திலும் இத்தகைய அரசியல் அநாகரீகம் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் நடுநிலையோடு செயல்படுவதாக கூறி வரும் தேர்தல் ஆணையம் ஜெயலலிதா பேசுவது பற்றி கண்டு கொள்வதில்லை.
எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி. லட்சிய கூட்டணி. ஆனால் அ.தி.மு.க., நடிகர் சேர்ந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. நடிகரை கூட்டணியில் சேர்த்ததால் பொதுமக்களின் ஆதரவு மாறி தமக்கு பாதிப்பு வந்துவிடும் என்று அ.தி.மு.க. தலைமை நினைக்கிறதாம்.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. மதில் மேல் பூனையாக இருந்த சில தொகுதிகளிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று அணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அவர்கள் ஒட்டு மொத்தமாக தேர்தல் ஆணையத்தை நம்பி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி கெடுபிடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment