Mar 31, 2011

கோயில் கட்ட இடம் தானம் ! மகபூப் பாஷா !!!

மதுரை: ஏப்ரல் 1, மதுரை எம்.கே.புரத்தில் முனியாண்டி கோயில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள, 200 சதுர அடி இடத்தை தானமாக வழங்கி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வலுசேர்த்திருக்கிறார் மகபூப்பாஷா(40). இப்பகுதியைச் சேர்ந்த இவர், பீரோ தயாரிப்பு கம்பெனி நடத்துகிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்துக்கள் செல்வதற்காக தனது இடத்தை தானமாக வழங்கி அப்போதே ஒற்றுமையை வெளிப்படுத்திஇருக்கிறார் இவரது தாத்தா நீருஉசேன். இவருக்கு சொந்தமான இடத்தில், சிலர் முனியாண்டி கோயிலை சிறியதாக கட்டினர். இக்கோயிலை விரிவுப்படுத்த திட்டமிட்ட நிர்வாகிகள் இடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்து மகபூப்பாஷாவை அணுகினர்.

அவர் "மதங்கள் வேறாக இருந்தாலும், சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கோயிலுக்கு இடத்தை தானமாக வழங்கினால் தான் சரியாக இருக்கும்' என்றார். இதை தொடர்ந்து, நேற்று மதியம் அரசரடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கோயில் நிர்வாகிகள் தங்கச்சாமி, கருப்பையா, ராஜூ ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை சார்' என்று நம்மை நெகிழ வைத்தார்.

1 comment:

ram said...

இவர் நீடுழி வாழ எல்லாம் வல்ல அல்லா இவரை சீரும் சிறப்புடனும் வாழ்த்துவார்

இப்படிக்கு

ரமேஷ்