பெங்களுரூ: மார்ச் 28, கர்நாடகாவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் பண பலம் மற்றும் இந்துவா அமைப்புகளை பயன்படுத்த பா.ஜ. திட்டமிட்டிருப்பதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகவுடா கூறினார்.
கர்நாடகாவில் சென்னப்பட்டணா, பங்காரப்பேட்டை, ஜகலூர் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தல்களில் ஆப்பரேசன் லோட்டஸ் என்ற பெயரில் பா.ஜ. பணத்தை வாரி இறைத்தும், ஹிந்துத்வா பயங்கரவாத மத அமைப்புகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள ஹிந்துத்வா பயங்கரவாத அமைப்புகளை பயன்படுத்தி இடைத் தேர்தல்களில் வெற்றி பெற முயற்சிக்கிறது. இவைகளுக்கு மக்கள் சரியான பதிலடி கொடு்ப்பார்கள்.
பா.ஜ.வை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும், வரும் இடைத்தேர்தல்கள் மூலம் பா.ஜ.க.வுக்கும், முதல்வர் எடியூரப்பாவிற்கும் சரியான பாடம் புகட்டுவோம். இவ்வாறு தேவகவுடா கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment