மார்ச் 25, நாளை கழிச்சி முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்று சொல்லிக்கிட்டு திரியறான் ஒருத்தன்; என்நேரமும் தண்ணிய போட்டுக்கிட்டு.
அட மூதேவி நீ தண்ணியப்போடு. ஆனா முதலமைச்சர் ஆகப்போறேன்னு சொல்லாத. முதலமைச்சர் சீட்டு என்ன மியூசிக்கல் சேரா?
அந்த சீட்டு என்ன சாதாரண சீட்டா? தண்ணியப்போட்டா என்ன வேணும்னாலும் பேசிட வேண்டியதா? ஒருத்தன் கேட்டான் என்னய.....அவர எதிர்த்து நிக்கப்போறீங்கன்னு சொன்னீங்களே எதிர்த்து நிற்கப்போறீங்களான்னு.
ஒரு மேடையில ஏறுனாலே ஸ்டடியா நிக்க முடியல.. ( ஆடிக்காட்டுகிறார்) இந்த ஆள எதிர்த்து நின்னா எனக்குத்தாங்க கேவலம். அதனால நான் ரிஜக்ட் பண்ணிட்டு மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை.
அய்யா மன்னிசிக்குங்க என்று கலைஞரை பார்த்து சொல்லிவிட்டு. டேய் நீ முதலமைச்சர்னா நான் பிரதமர் நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி. நீ ஜனாதிபதின்னா நான் ஒபாமா என்று உரக்கக் சொன்னார், பலத்த ஆரவாரத்திற்கிடையே.
அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார்.
கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு. கேப்டன் என்றால் என்னன்னு தெரியுமா? தண்ணியில மிதக்குற கப்பலை ஒட்டுகிறவர் பேர் தான் கேப்டன்... எந்நேரமும் தண்ணியிலயே மிதக்குறவானுக்கு பேர் கேப்டன் இல்லை... என்று இதையே இரண்டு முறை அழுத்தமாக சொன்னார்.
தொடர்ந்து கிங் மேக்கரா நீ... நீ டிரிங்க் மேக்கார் என்றார். திருவாரூர் தெற்கு ரதவீதியில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வடிவேலு இப்படி பேசியதைக் கேட்ட விஜயகாந்த் கடுப்பாகி இருக்கிறாராம். விஜயகாந்த் வடிவேலு விவகாரம் பழைய கதை என்று பார்த்தால் இப்போதுதான் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment