Mar 20, 2011

நான் ஊருக்கு போகிறேன்!! வைகோ!!

மார்ச் 21,: ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் அ.தி.மு.க., திட்டவட்டமாக இருந்ததால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க., உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்செயலர்கள் கூட்டம், தாயகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், 56மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். அதில், "புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்து போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க., கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.

கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க., வுக்கு இல்லை. தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை பொதுத்தேர்தலில் மட்டுமே போட்டியிடுவது இல்லை' என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கபட்டிக்கு சொல்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, எனது தாயாரை சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்குவதற்காக சொந்த ஊருக்கு செல்கிறேன். அம்மாவை பார்க்க செல்கிறேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் எந்த அறிக்கையும் விடப்போவதில்லை. அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறேன்’’ என்று தெரிவித்தார்.

1 comment:

தமிழ்க்காதலன் said...

நல்ல மனிதனை நம் சமூகம் எப்படி அவமதிக்கிறது என்பதற்கு வை.கோ ஒரு உதாரணம். நாம் நல்ல தகுதியுடைய தலைவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் நம்முடைய எதிர்காலத்தை நாம் தொலைத்து விடுகிறோம். நம் சமூகம் சிந்திக்க வேண்டும். நீங்கள் நம் வலைபூவுக்கு வருகைத் தாருங்கள்.