புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள் விநாயகருக்கு எத்தனை மனைவிகள்? பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே! அபிதான சிந்தாமணி 1910 இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக் களஞ்சியம் என்சைக்ளோ பீடியா! விநாயருக்கு ஒரு பெண்டாட்டி, இரண்டு பெண்டாட்டி இல்லை பதினாறு பெண்டாட்டி. (ஆதார நூல் அபிதான சிந்தாமணி).
வல்லபை கணபதி வல்லபை கணபதி என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்வது எனக்கே கொஞ்சம் சங்கடமான நிலை. வல்லபை என்பது விநாயகருடைய மனைவி. சுப்பிரமணியன் விநாயகருடைய தம்பி.
சுப்பிரமணியம் சூரபத்மனோடு சண்டைக்குப் போகின்றார். சூரபத்மன் அசுரன். அசுரன் என்றால் ரொம்ப பலமானவன். அவனுக்கு வீரர்கள் அதிகம். ஆனால் சுப்பிரமணியனுக்கு படை வீரர்கள் இல்லை. தனக்குப் படை வீரர்கள் வேண்டும் என்று தம்பி சுப்பிரமணியம் அண்ணனிடம் விநாயகனிடம் கேட்கின்றார்.
உடனே கணேசர் என்ன பண்ணுகிறார்? உனக்கு இராணுவம் வேண்டும் சைனியம் வேண்டும். அவ்வளவு தானே என்று சொல்லி, தனது மனைவி வல்லபை மூலம் ஆயிரக்கணக்கான வீரர்களை உற்பத்தி பண்ணி அனுப்புகிறார். சைனியம் வந்து கொண்டேயிருக்கிறது. ஃபேக்டரியில் அச்சடித்து வெளியே வந்து கொட்டுகிற மாதிரியே இருக்கிறது. ஒரு கட்டத்தில் போதும், போதும் என்று சுப்பிரமணியரே நினைத்தார். கார்க் அடைக்கிற மாதிரி...உடனே சைனியத்தை நிறுத்துவதற்காக விநாயகர் என்ன செய்தார்? துதிக்கையை வைத்து கார்க் மாதிரி அடைத்து விட்டார். இதற்கு மேல் சொன்னால் எனது தகுதிக்கு குறைச்சல்.
உண்மையிலேயே ரொம்ப அசிங்கமான விசயம் அது. நான் இதை விட ரொம்ப நாசூக்காக சொல்ல முடியாது. இதெல்லாம் கற்பனை என்று நினைக்காதீர்கள்.
விநாயகர்பற்றி அவன் பிறப்புப் பற்றி விநாயகர் புராணம் கூறுகிறது; கந்தபுராணம் பேசுகிறது -அபிதான சிந்தாமணி என்னும் புராணக் களஞ்சியம் புட்டுப் புட்டு வைக்கிறது. தேவாரத்தில் திருஞான சம்பந்தனே பாடியிருக்கிறான்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் திருத்துறைபூண்டி மார்க்கத்தில் வலிவலம் எனும் ஊரில் கோயில் கொண்ட சிவனைப் பற்றிதான் திருஞான சம்பந்தன் இப்படிப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் அந்த வலிவலம் கோயிலிலேயே கூட பொறிக்கப்பட்டுள்ளதே! இந்து முன்னணியினருக்கு எரிச்சல் வந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? விநாயகன் ஆபாசமாகப் பிறந்தான் என்று கூறும் தேவாரத்தை அல்லவா தீயில் போட்டுப் பொசுக்க வேண்டும்! பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து பிள்ளையார் பிடித்து வைக்கப்பட்டவர் என்று சிவபுராணத்திலும், கந்தபுராணத்திலும் கூறப்பட்டுள்ளதே, இந்தப் புராணங்களை அல்லவா பூமியில் போட்டுப் புதைப்பதற்கு முன் வர வேண்டும்.
சூரபத்மனை எதிர்த்த போரில் அண்ணன் சுப்பிரமணியன் தோற்ற நிலையில், தம்பியாகிய விநாயகன் களத்தில் குதித்தான் என்றும், அசுரர்களை அழிக்க அழிக்க வீரர்கள் புற்றீசலாக வந்து கொண்டேயிருந்தனர் என்றும், வல்லபை என்ற பெண்ணின் குறியிலிருந்து அவர்கள் உற்பத்தியாகி வந்தனர் என்றும், விநாயகன் தன் துதிக்கையால் வல்லபையின் பெண்குறியை அடைத்தான் என்றும், அதனால்தான் விநாயகனுக்கு வல்லபை கணபதி என்று பெயர் வந்தது என்றும் கந்தபுராணம் கதைக்கிறதே. மானம், வெட்கம், ரோஷம் இருந்தால் இந்த இந்து முன்னணிகள் கந்தபுராணத்தைக் கொளுத்தும் போராட்டத்தையல்லவா நடத்த வேண்டும்?
இந்தக் கணபதி ஓர் இறக்குமதிச் சரக்குதானே! கி.பி.641-42 இல் பல்லவ மன்னனின் சேனாதிபதியான பரஞ்சோதி படையெடுத்து புலிகேசியைத் தோற்கடித்து வாதாபியை வென்று, அதன் அறிகுறியாக அங்கு இருந்த இந்த விநாயகனைக் கொண்டு வந்து, திருச்செங்காட்டாங்குடி என்னும் ஊரில் கோயில் கட்டி வைத்தான் என்று தமிழ் அறிஞர் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் எம்.ஏ; பி.எல்., எம்.ஓ.எல் அவர்கள் எழுதியுள்ளாரே_
சிவசேனா பால்தாக்கரேயை விட வா இவர்கள் விநாயகர்களின் பக்தர்கள்? 1995இல் ஒரு விநாயக சதுர்த்தியின் போது அவரின் மனைவி விநாயகப் பூஜையில் மூழ்கி இருந்த நிலையிலேயே மரணம் அடைந்தார்; எவ்வளவோ முயற்சித்தும் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. சீ... என்ன கடவுள் என்ன விநாயகன்? எல்லாம் பொய்! பொய்!! என்று கூறி வீட்டில் இருந்த விநாயகன் உள்பட சாமிப் படங்களையெல்லாம் தூக்கி வெளியில் எறிந்தாரே (தி வீக் 19.11.1993), அவர் என்ன நாத்திகரா?
கடவுளை அவமானப்படுத்தி விட்டனர் தி.க.வினர் என்று காவல்நிலையத்தில் படைஎடுக்கும் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்கிறார்கள்? விநாயகர் ஊர்வலம் நடத்தி அந்தச் சிலைகளை நீர் நிலைகளில் தள்ளி, ஏறி மிதித்து, அடி அடி என்று அடித்து மூழ்கடிக்கிறார்களே அது மட்டும் விநாயகன் அவமதிப்பு இல்லையா? இந்து முன்னணியே, ஓடாதே நில் ஒழுங்காக நின்று பதில் சொல்!
திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் வல்லபையின் குறியில் விநாயகனின் தும்பிக்கை இருப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது. இது ஒன்றும் திராவிடர் கழகத்தரின் கற்பனையோ, வக்கிரப் புத்தியோ அல்ல. எத்தனை எத்தனைக் கோயில் தேர்களில் இந்த உருவம் வடிக்கப்பட்டுள்ளது. எத்தனை எத்தனைக் கோபுரங்களில் இந்த வல்லபை கணபதி காட்சிப் படுத்தப்பட்டுள்ளார்! வல்லபை கணபதி கோயிலே தருமபுரிக்குப் பக்கத்தில் இருக்கிறதே! ஆத்திரம் வந்தால் இந்து முன்னணி ஆத்திகப் பிரமுகர்கள் சம்மட்டியை எடுத்துக் கொண்டு போய் வல்லபை கணபதிக் கோயிலை இடித்துத் தள்ள வேண்டியதுதானே!
தேர்களைக் கொளுத்த வேண்டியதுதானே! மானமுள்ள நம் தமிழச்சிகள் எந்த வகையில் எது கொண்டு வல்லபை கணபதியைச் சாத்த வேண்டுமோ அது கொண்டு சாத்த வேண்டியதுதானே!
மூலத்தை விட்டு விட்டு மூளை கொண்டு ஆராய்பவனைக் காய்ந்தால், காய்கிறவனுக்குக் கடுகளவும் புத்தியில்லை என்றுதான் பொருள். ஆத்திரப்படாமல், அருமைத் தோழா, ஒரே ஒரு நொடி ஆம் ஒரே ஒரு நொடி இந்த ஆபாசக் கடவுள்களின் பிறப்பு வளர்ப்பு செய்திகளைச் சிந்தித்துப் பாருங்கள். கண்டிப்பாகச் சீற்றம் வரும் இந்துமதக் கடவுள்கள்மீதும், அவற்றைக் கற்பித்த காட்டு விலங்காண்டிகள் மீதும். ஆறுவது சினம் அவ்வை வாக்கு!
பிள்ளையாரின் ஆபாசமான கதைகள்:
1) பார்வதி மனைவி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறார். உடம்பில் இருக்கின்ற அழுக்குருண்டையைத் திரட்டி ஒரு பிடி பிடித்து உருவமாக வைத்து விட்டுப் போய் அதற்கு உயிர் கொடுத்தார். இதுதான் பிள்ளையார். பாத்ரூமுக்கு கதவு கிடையாது. நான் குளிக்கும் பொழுது யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லி விட்டார். பார்வதி சிவ பெருமான் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார் போல இருக் கிறது. ஆகவே விடாதே என்று சொல்லி விட்டு போய் விட்டார். சிவபெருமான் திடீரென்று வந்து உள்ளே போகிறார். விநாயகன் தடுக்கின்றார். என்னை தடுப்பதற்கு நீ யார் என்று வாளை எடுத்து பிள்ளையார் கழுத்தை சிவபெருமான் சீவி விடுகின்றார். உடனே உள்ளே போய் விடுகின்றார். இந்த அம்மா கேட்கிறார். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள். நான் ஒரு காவலாளியை வைத்திருந்தேனே என்று சொல்லுகின்றார். இல்லை ஒருவன் தடுத்தான். நான் அவன் கழுத்தை வெட்டிவிட்டேன் என்று சிவபெருமான் சொல்லுகின்றார். அப்படியா.. அந்தப் பிள்ளைக்கு உயிர் ஊட்டுகின்றேன் என்று சொல்லுகின்றார். என்ன செய்வது என்று சிவபெருமான் பார்த்தார். ஒரு யானை இருந்தது. யானை தலையை வெட்டி, வெட்டிய உடலுக்கு உயிர் ஊட்டினார். இது ஒரு கதை. பிள்ளையாருக்கு என்று எழுதி வைத்திருக்கின்றான்.
2) பரமசிவனும், பார்வதியும் காட்டில் உலவுவதற்குப் போனார்கள். அவர்கள் சென்ற பொழுது ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கூடி கலவியில் இருந்ததைப் பார்த்த இவர்கள். அதே மாதிரி நாமும் செய்ய வேண்டுமென்று நினைத்தார்கள். இதை விட அசிங்கம் வேறு இருக்க முடியுமா? இதுதான் விநாயகன் பிறந்த கதைகள். நாங்கள் கொஞ்சம் தரத்தோடு பேசுகின்றோம். புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள்.
நன்றி :"விடுதலை":
நன்றி: இந்து மத சிந்தனையாளர் அறிஞ்சர், அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment