Feb 6, 2011
மீனவர் மீதான இலங்கை தாக்குதலைக் கண்டித்து வைகோ உண்ணாவிரதம்!!
நாகப்பட்டனம் : தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் நாகையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்று காலை நாகை, அவுரி திடலில் வைகோ தலைமையி்ல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்தும், இதில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தப் போராட்டம் தொடங்கியது.உண்ணா விரதத்தில் வைகோவுடன் பெரும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment