Feb 6, 2011
காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை என்றால்? இந்தியாவின் மீது போர் தொடுப்போம்!!
இஸ்லாமாபாத், பிப். 6: காஷ்மீரை விட்டு வெளியேறாவிட்டால் போரை சந்திக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும் என ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் முகமது சயீத் கூறினார்.காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தரும் தினம் பாகிஸ்தானில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன. லாகூரில் நடைபெற்ற பேரணியில் சயீத் பேசியதாவது: காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. உடனடியாக நீங்கள் (இந்தியா) வெளியேறாவிட்டால் போரைத் தொடங்கத் தயாராக உள்ளோம் என்றார். காஷ்மீர் ஆதரவு தினத்தையொட்டி அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப் ராஸô கிலானி ஆகியோரும் அறிக்கை வெளியிட்டனர். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஒரு நிமிடம் மெüனம் அனுசரிக்கப்பட்டது. மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஹபீஸ்தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment