
விக்கிலீக்ஸின் ஜீலியன் அசாஞ்ச் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகின்றார். இதன் பின் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவார். விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய செய்திகளுக்காக இவர் ஆஜராகவில்லை. பெண்களிடம் தவறான பாலியல் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஸ்வீடன் நாட்டு நீதித்துறையினர் அவரை ஒப்படைக்கக் கேட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை இவர் மறுத்துள்ளார். 200,000 பவுண்டு பிணயத்தில் வெளிவந்தவர் தனது நாடு கடத்தலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் அசாஞ்ச் ஒவ்வொரு நாளும் அங்குள்ள காவல்துறையினரிடம் ஆஜராக வேண்டு மென்றும், ஒவ்வொரு நாளும் லண்டன் நகருக்கு வெளியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.
மேலும் ஒரு மின்னணு இயந்திரத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதன் மூலம் அவர் நடமாட்டம் கண்காணிக்கப்படும். அவர் ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்பட்டால், குவாண்டனுமோ சிறையில் அடைக்கப்படலாம் என அவரது வக்கீல்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அசாஞ்ச் கேவலமாக நடத்தப்படலாம் அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளனர். ஆகையால் அவரின் மனித உரிமைகள் மீறப்படலாம். எனவே நாடு கடத்தப்படாதிருக்க வேண்டும் என பிரிட்டனை கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment